நியாயங்கள் ஜெயிக்கட்டும்
1990 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியாயங்கள் ஜெயிக்கட்டும் (Nyayangal Jayikkattum) என்பது 1990ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். சிவசந்திரன் எழுதி இயக்கிய இப்படத்தில் சிவகுமார், லட்சுமி , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்தனர். இது 1990 சூன் முதல் நாளன்று வெளியிடப்பட்டது.
Remove ads
கதை
சத்யபாரதி, தமிழ்கண்ணன் ஆகிய இரண்டு அரசியல்வாதிகளுக்கு இடையிலான பகையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
நடிப்பு
- சிவகுமார் சத்தியபாரதியாக
- இலட்சுமி சரஸ்வதியாக
- ஐஸ்வர்யா சரஸ்வதியின் மகளாக
- ஜெய்கணேஷ் ஜெகனாக
- சிவச்சந்திரன் விக்டர் ராஜாவாக
- கிட்டி தமிழ்கண்ணனாக
- வினோத் குமார் தமிழ்கண்ணனின் மகனாக
தயாரிப்பு
நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்பது ஐஸ்வர்யாவின் முதல் தமிழ் படம் ஆகும்.[3] இதற்கு முதலில் பெத்தவங்க மத்தவங்க என்று பெயரிடப்பட்டது, ஆனால் பின்னர் பெயர் மாற்றப்பட்டது.[4]
இசை
இப்படத்திற்கு சங்கர் -கணேஷ் இசையமைக்க, பாடல்களை வாலி எழுதினார்.[5]
Remove ads
வெளியீடும், வரவேற்பும்
நியாயங்கள் ஜெயிக்கட்டும் 1990 சூன் முதல் நாளன்று வெளியிடப்பட்டது. தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என்.கிருஷ்ணசாமி எழுதிய விமர்சனத்தில், "சிவச்சந்திரனின் திரைக்கதை பார்வையாளர்களை திரைப்படத்தில் ஒன்றுபடவைத்து அதன் கதாபாத்திரங்களைப் பற்றி கவலைப்பட வைக்கிறது."
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads