நியூபவுண்ட்லாந்து (தீவு)

From Wikipedia, the free encyclopedia

நியூபவுண்ட்லாந்து (தீவு)
Remove ads

நியூபவுண்ட்லாந்து (Newfoundland) வட அமெரிக்கப் பெருநிலப்பகுதியின் கிழக்குக் கடலோரமாக உள்ள பெரிய கனடியத் தீவாகும். நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் பெரும்பாலான மக்கள் வாழும் தீவாகவும் உள்ளது. இந்தத் தீவு லாப்ரடோர் மூவலந்தீவிலிருந்து பெல் ஐல் நீரிணையாலும் கேப் பிரெடன் தீவிலிருந்து கபோட் நீரிணையாலும் பிரிக்கப்பட்டுள்ளது. செயின்ட் லாரென்சு ஆற்றின் முகத்துவாரத்தை அடைத்துக் கொண்டுள்ளதால் உலகின் மிகப் பெரும் கயவாயான செயின்ட் லாரன்சு வளைகுடா உருவாகியுள்ளது. நியூபவுண்ட்லாந்தின் பக்கத்துப் பகுதியாக பிரான்சிய கடல்கடந்த சமூகமான செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் உள்ளது.

விரைவான உண்மைகள் Nickname: "தி ராக்", புவியியல் ...

108,860 சதுர கிலோமீட்டர்கள் (42,031 sq mi) பரப்பளவுள்ள[5] நியூபவுண்ட்லாந்து உலகின் 16ஆவது பெரும் தீவாகவும் கனடாவின் நான்காவது தீவாகவும் உள்ளது. மாகாணத் தலைநகரம், செயின்ட் ஜான்ஸ், தீவின் தென்கிழக்குக் கடலோரத்தில் அமைந்துள்ளது; தலைநகரத்தின் தெற்கில் உள்ள கேப் இசுப்பியர் வட அமெரிக்காவின் கிழக்குக் கோடி முனையாக (கிரீன்லாந்து நீங்கலாக) விளங்குகின்றது.

கனடாவின் 2006ஆம் ஆண்டு அலுவல்முறை கணக்கெடுப்பின்படி, நியூபவுண்ட்லாந்தின் 57% நபர்கள் பிரித்தானிய அல்லது ஐரிய மரபுவழியினராக கூறிக் கொள்கின்றனர்; 43.2% நபர்கள் குறைந்தது ஒரு ஆங்கிலப் பெற்றோரையும், 21.5% நபர்கள் ஒரு ஐரியப் பெற்றோரையும், 7% நபர்கள் குறைந்தது ஒரு இசுக்காட்டிய பெற்றோரையும் கொண்டுள்ளனர். தவிரவும் 6.1% பேர் குறைந்தது ஒரு பெற்றாராவது பிரான்சியராக கொண்டுள்ளனர்.[6] 2006 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்டொகை 479,105 ஆகும்.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads