நியூ ஹரைசன்ஸ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நியூ ஹரைசன்ஸ் (New Horizons) என்பது தற்போது நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கும் ஒரு தானியங்கி விண்கலமாகும். இதுவே புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்ட முதலாவது விண்கலமாகும். இது புளூட்டோவையும் அதன் நிலாக்களான சாரன், நிக்ஸ், மற்றும் ஹைட்ரா ஆகியவற்றை ஆராயும்.

விரைவான உண்மைகள் இயக்குபவர், திட்ட வகை ...
Thumb
நியூ ஹரைசன்ஸ் இனால் காணப்பட்ட 132524 APL என்ற சிறுகோள்

நியூ ஹரைசன்ஸ் விண்ணுளவி ஜனவரி 19, 2006 இல் புளோரிடாவில் உள்ள கேப் கனவேரல் வான்படைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இது பெப்ரவரி 28, 2007 இல் வியாழனை 5:43:40 UTC நேரத்தில் அண்மித்தது. புளூட்டோவை இது ஜூலை 2015 இல் இது புளூட்டோவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பூமி சார்பான வேகம் 16.21 கி.மீ./செ (36,260 மைல்/மணி) ஆகும். இதுவே இதுவரை விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலங்களில் அதிகூடிய வேகத்தைக் கொண்டதாகும்.

இதற்கான மொத்த செலவீனம் 15 ஆண்டுகளுக்கு (2001 இலிருந்து 2015 வரை) கிட்டத்தட்ட $650 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Remove ads

செவ்வாய், மற்றும் சிறுகோள்களை தாண்டல்

ஏப்ரல் 7, 2006, 1000 UTC நேரத்திற்கு, இவ்விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டத்தை 21 கி.மீ./செக் வேகத்தில் கடந்தது. அப்போது அது 243 மில்லியன் கிலோ மீட்டர் சூரிய தூரத்தில் இருந்தது.[1]

நியூ ஹரைசன்ஸ் தனது வழியில் 101,867 கி.மீ. தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை ஜூன் 13, 2006 இல் சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது. இச்சிறுகோளின் விட்டம் கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர்கள் ஆகும். இதிலிருந்து மிக வேகமாய்ச் செல்லும் பொருட்களை இனங்காணும் வலிமையை இவ்விண்கலம் பெற்றுள்ளது என நிரூபிக்கப்பட்டது. ரால்ஃப் தொலைக்காட்டி மூலம் இதன் படங்கள் பிடிக்கப்பட்டன.[2]

பயணத் திட்டக் காலக்கோடு

  • ஜனவரி 19, 2006 — விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • ஏப்ரல் 7, 2006 — செவ்வாய்க் கோளைத் தாண்டியது.
  • ஜூன் 13, 2006 — 132524 APL என்ற சிறுகோளுக்கு மிகக்கிட்டவாக அண்மித்தது.
  • நவம்பர் 28, 2006 — புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
  • ஜனவரி 8, 2007 — வியாழனை சந்திக்க ஆரம்பித்தது.
  • பெப்ரவரி 28, 2007 — வியாழனை அண்மித்தது. (2.305 மில்லியன் கி.மீ. தூரத்தில், 21.219 கி.மீ./செக் வேகத்தில்).
  • மார்ச் 5, 2007 — வியாழனை விட்டு விலகியது.
  • ஜூன் 9, 2008சனி கோளைக் கடக்கும்.
  • மார்ச் 5, 2011யுரேனஸ் கோளின் சுற்றுப் பாதையைக் கடக்கும்.
  • ஆகஸ்ட் 1, 2014நெப்டியூன் கோளின் சுற்றுப்பாதையைக் கடக்கும்.
  • ஜூலை 14, 2015 — புளூட்டோவை அண்மிக்கும். (11096 கி.மீ. தூரத்தில், 13.780 கி.மீ./செக் வேகத்தில்)
  • ஜூலை 14, 2015சாரன் நிலாவை அண்மிக்கும் (26927 கி.மீ. தூரத்தில், 13.875 கி.மீ./செக் வேகத்தில்)
  • 2016-2020 — possible flyby of one or more Kuiper Belt objects (KBOs).
Remove ads

மேற்கோள்கள்

ஊடகம்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads