நிவாரி மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிவாரி மாவட்டம் (Niwari district) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த 52-வது புதிய மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைவமையிடம் நிவாரி நகரம் ஆகும். இந்திய விடுதலைக்கு முன்னர் இம்மாவட்டம் ஓர்ச்சா சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது.
புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள திகம்கர் மாவட்டத்தின் மூன்று வருவாய் வட்டங்களைக்க் கொண்டு இப்புதிய நிவாரி மாவட்டம் 1 அக்டோபர் 2018 அன்று நிறுவப்பட்டது. [1][2][3]
Remove ads
மாவட்ட நிர்வாகம்
மத்தியப் பிரதேசத்தின் மிகச் சிறிய மாவட்டமான நிவாரி மாவட்டத்தின் பரப்பளவு 1,170 சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாவட்டம் நிவாரி, ஓர்ச்சா, பிரித்திவிபூர் எனும் மூன்று வருவாய் வட்டங்களும், 281 கிராமங்களும் கொண்டது. மேலும் இம்மாவட்டத்தில் நிவாரி, ஓர்ச்சா, தரிச்சார் கலான், ஜெரோன் கல்சா மற்றும் பிரித்திவிபூர் என 5 நகராட்சிகளும் கொண்டது. இதன் மக்கள்தொகை 4,04,807 ஆகும்.இம்மாவட்டத்தின் ஆட்சி மொழி இந்தி ஆகும். [4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads