நீர்கொழும்பு பேச்சுத் தமிழ்
இலங்கை நீர்கொழும்பில் வாழும் தமிழ் மீனவர்களின் பேச்சுவழக்கு From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீர்கொழும்பு தமிழ் அல்லது நீர்கொழும்பு மீனவர் தமிழ் (Negombo Tamil dialect or Negombo Fishermen's Tamil) என்பது இலங்கையின் நீர்கொழும்பு மீனவர்களால் பேசப்படும் இலங்கைத் தமிழ் வட்டாரவழக்கு ஆகும். இலங்கையின் மேற்கு புத்தளம் மாவட்டம் மற்றும் கம்பகா மாவட்டத்தின் முன்னாள் தமிழ் பேசும் மக்களில் எஞ்சியிருக்கும் மக்கள் பயன்படுத்தும் பல கிளைமொழிகளில் இதுவும் ஒன்றாகும். அவர்களை தமிழினத்தவர் என்று அடையாளப்படுத்துபவர்களால் நீர்கொம்புத் தமிழர்கள் அல்லது புத்தளம் தமிழர்கள் என அழைக்கப்படுகின்றனர் . இந்த மாவட்டங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் அவர்களை சிங்கள இனத்தவர்கள் என்று அடையாளப்படுத்தினாலும் சிலர் இரு மொழிகளைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.[1][2]
Remove ads
உருவவியல்
நீர்கொழும்பின் கரவா அல்லது கரையார் சாதி மீனவர்களால் பேசப்படும் நீர்கொழும்பு தமிழ் என்பது பல தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. அந்த மாற்றங்களில் சில சிங்களத்துடனான தொடர்பின் விளைவாக தோன்றியிருக்கலாம். சிங்களத்துடனான இதன் தொடர்பின் விளைவாக, இது பேசப்படும் அல்லது பேச்சுவழக்கு சிங்களத்துடன் கணிசமான உருவ ஒத்திசைவுக்கு உட்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, நீர்கொழும்புத் தமிழானது பெரும்பாலும் நபர் மற்றும் எண்ணுக்கான தமிழ் வழு வினை உருவ அமைப்பை இழந்துள்ளது. பேச்சுவழக்கு சிங்களம் (இலக்கிய சிங்களம் போலல்லாமல்) அனைத்து நபர்களுக்கும் ஒருமை, பன்மை ஆகியவற்றக்கு ஒரே வினைச்சொல் வடிவத்தைக் கொண்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, பெரும்பாலான தமிழ் பேச்சுவழக்குகளின் பேச்சு மொழி மற்றும் எழுத்து மொழிகளில் நபர் மற்றும் எண்ணுக்கான ஒருமைப் பன்மை வினை இயைபு உருவ அமைப்பைத் தக்கவைத்திருக்கின்றன. எனவே நீர்கொழும்பு தமிழை யாழ்ப்பாணத் தமிழ் பேச்சுவழக்குடன் ஒப்பிடுகையில், இலங்கைத் தமிழ் இனக்குழுவின் முக்கிய பேச்சுவழக்காக உள்ளது:
- a. naan kolumbu-kki poo-ra (நீர்கொழும்புத் தமிழ்)
I Colombo go (I go to Colombo)
- b. naan kolumbu-kku poo-r-een (யாழ்ப்பாணத் தமிழ்)
I Colombo going (I am going to Colombo)
- c. mamə koləmbə-Tə yanəwa (சிங்கள மொழி)
I Colombo go (I go to Colombo)
சிங்களத்தின் செல்வாக்கினால் நீர்க்கொழுப்புத் தமிழில் பல இலக்கணப் பண்புகள் உருவாக்கியுள்ளது.
Remove ads
தனித்துவமான பேச்சுவழக்கு
நீர்க்கொழுப்புத் தமிழ் அநேகமாக இந்தியாவில் தோன்றியதாக இருக்கலாம், ஆனால் பின்னர் இலங்கைத் தமிழ்ப் பண்புகளை ஏற்றுக்கொண்டது மேலும் ஏற்றுக்கொண்டுவருகிறது. இந்த வட்டாரவழக்கு 50,000 பேரால் பேசப்படுகிறது, எனவே இது மிகவும் தனித்துவமான பேச்சுவழக்காகும். கர்நாடகத்தைச் சார்ந்த சரஸ்வத் கொங்கனி (நட்கர்னி 1975), தமிழ்நாட்டைச் சார்ந்த சௌராஷ்டிரி (ஸ்மித் 1978), இலங்கை கிரியோல் போர்த்துகீசியம், குப்வாரின் உருது, மராத்தி, கன்னட பேச்சுவழக்குகள் ( கம்பர்ஸ் மற்றும் வில்சன் 1971), ஆகியவற்ஐப் போல, நீழ்க்கொழும்புத் தமிழ் இலக்கணமானது நிலையக உள்ள இருமொழிப் பயன்பாட்டின் விளைவினால் ஏற்பட்ட மாற்றமாகும்.[1][2]
யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் குடியேறியதை விட கரையார்கள் மிகவும் தாமதமாக இலங்கைக்கு குடிபெயர்ந்தனர் என்பதே நீர்கொழும்பு தமிழ் மொழி பேச்சுவழக்கைக் கொண்டு கருதப்படுகிறது. இந்தப் பேச்சுவழக்கு சோழமண்டலக் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு வந்து சிங்கள மொழியின் தாக்கத்தைப் பெற்றுத் தொடர்ந்து பரிணமிக்கத் தொடங்கி நீர்கொழும்பு பேச்சுவழக்காக ஆனது என்பதைக் குறிக்கும். எனவே, சில அம்சங்களில், யாழ்ப்பாணத் தமிழை விட, தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழுக்கு நெருக்கமாக நீர்க்கொழும்புத் தமிழ் உள்ளது. [3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads