நீர்க்காகம்

From Wikipedia, the free encyclopedia

நீர்க்காகம்
Remove ads

நீர்க்காகம் (cormorant) என்பது ஒருவகை நீர்ப்பறவை ஆகும். இச்சொல் பலக்ரோகோராசிடாய் (Phalacrocoracidae) குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 வகையான நீர்ப்பறவை இனங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, இனங்கள் ...

நீர்க்காகங்கள் நடுத்தரம் முதல் பெரிய அளவுடைய பறவைகள் ஆகும். இவற்றின் உடல் எடை 0.35-5 கிலோகிராம் மற்றும் இறக்கை நீளம் 45-100 செ.மீ. (18-39 அங்குலம்) ஆகும். இவற்றில் பெரும்பகுதி இனங்கள் கருப்பு இறகுகளைக் கொண்டுள்ளன. அலகானது நீளமாகவும், ஒல்லியாகவும் மற்றும் வளைந்தும் காணப்படுகிறது. இவற்றின் நான்கு கால்விரல்களுக்கு நடுவிலும் தோல் உள்ளது. அனைத்து இனங்களும் மீன்களை உண்கின்றன. நீரின் மேற்பரப்பில் இருந்து முக்குளிப்பதன் மூலம் இரையைப் பிடிக்கின்றன. சில நீர்க்காகங்கள் சுமார் 45 மீ ஆழம் வரை செல்கின்றன. இவற்றின் இறக்கைகள் குட்டையாக உள்ளன. 

இவை கரையோரத்தில், மரங்களில், தீவுகளில் அல்லது செங்குத்தான பாறைகளில் கூட்டமாக வாழ்பவை ஆகும். இவை கடலில் வாழ்வதில்லை. மாறாகக் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றன. இதன் உண்மையான மூதாதையர் ஒரு நன்னீர்ப் பறவை ஆகும். இவை மத்திய பசிபிக் தீவுகளைத் தவிர, உலகெங்கிலும் உள்ளன.

Remove ads

மனித கலாச்சாரத்தில்

மீன்பிடித்தல் 

Thumb
ஒரு சீன மீனவர் தனது இரண்டு நீர்க்காகங்களுடன்

உலகில் பல்வேறு இடங்களில் மனிதர்கள் நீர்க்காகங்களின் மீன் பிடிக்கும் திறனைப் பயன்படுத்துகின்றனர். பண்டைய எகிப்தில், பெருவில், கொரியா மற்றும் இந்தியாவில் நீர்க்காக மீன்பிடி நடைமுறையில் இருந்ததாக தொல்பொருள் சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சீனா மற்றும் சப்பானில் இது இன்னும் நடைமுறையில் உள்ளது.[1] சப்பானில், நீர்க்காக மீன்பிடித்தல் உகை (鵜 飼) என்று அழைக்கப்படுகிறது. கிபு நகரிலுள்ள நாகரா ஆற்றின் மீது 1,300 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்க்காக மீன்பிடித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. சீனாவின் குய்லின் நகரில் ஆழமற்ற லிஜியாங் ஆற்றின் நீர்க்காக மீன்பிடித்தல் மிகவும் பிரபலமானது ஆகும். கிபு நகரில், ஜப்பானிய நீர்க்காகங்கள் (P. capillatus) பயன்படுத்தப்படுகின்றன; சீன மீனவர்கள் பெரும்பாலும் பெரிய நீர்க்காகங்களை (P. carbo) பயன்படுத்துகின்றனர். ஐரோப்பாவில், இதே மாதிரியான மீன்பிடித்தல் மாசிடோனியாவின் டோரோன் ஏரியில் பயன்படுத்தப்பட்டது.

ஒரு பொதுவான நுட்பத்தில், நீர்க்காகத்தின் அடித்தொண்டைக்கு அருகே ஒரு சுருக்கு கட்டப்படுகிறது, இதனால் நீர்க்காகத்தால் சிறிய மீனை மட்டுமே விழுங்க முடிகிறது. நீர்க்காகம் ஒரு பெரிய மீனை விழுங்குவதற்கு முயற்சிக்கும் போது, ​​மீன் பறவையின் தொண்டைக்குள் சிக்கிக் கொள்கிறது. பறவை மீனவரின் படகுக்குத் திரும்பும்போது, ​​மீனவர் நீர்க்காகத்தின் தொண்டையில் இருந்து சுருக்கை அகற்றுகிறார். இந்த முறையானது இன்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் மீன் பிடிக்கக்கூடிய பல திறமையான முறைகள் இன்று வளர்ந்திருக்கின்றன. ஆனால் இன்னும் ஒரு கலாச்சாரப் பாரம்பரியமாக இது நடைமுறையில் உள்ளது.

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads