முக்கூர்த்தி தேசியப் பூங்கா

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்கா From Wikipedia, the free encyclopedia

முக்கூர்த்தி தேசியப் பூங்காmap
Remove ads

முக்கூர்த்தி தேசியப் பூங்கா தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி மேட்டுநிலத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப் பட்ட பகுதியாகும். இதன் பரப்பளவு 78.46 கி.மீ². இது இப்பகுதியின் சிறப்பான நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது நீலகிரி பல்லுயிர் வலயத்தின் ஒரு பகுதியாகும்.

விரைவான உண்மைகள்

இப்பகுதி புல்வெளிகளும் சோலைக் காடுகளும் உள்ளடங்கியது. மேலும் பல அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களின் தாயகமாக உள்ளது. இங்கு வங்காளப் புலி, ஆசிய யானை முதலியன உள்ளன. நீலகிரி வரையாடு இப்பகுதிக்கே உரித்தான விலங்கு. இப்பூங்கா முன்னர் வரையாட்டின் ஆங்கிலப் பெயரான நீலகிரி தார் தேசியப்பூங்கா என்றறியப்பட்டது.

இப்பகுதி கானுயிர்க் காப்பகமாக 1982 ஆகத்து 3-ஆம் நாளும் பின்னர் 1990 அக்டோபர் 15-இல் தேசியப்பூங்காவாகவும் தரமுயர்த்தப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads