நீலகிரி மந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீலகிரி மந்தி (Nilgiri langur) என்பது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் உள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் குரங்கு இனம் ஆகும். இவை கர்நாடகத்தின் குடகு, தமிழ்நாட்டு பழனி மலைகள், கேரலத்தின் ஏலக்காய் மலை ஆகிய மலைகளில் வாழுகின்றன. இதன் உடல் பளபளபளப்பான கருமையாகவும், மஞ்சளும் பழுப்பும் கலந்த தலையும் கொண்டவை. இதன் அளவு சாதாரணக் குரங்கின் அளவே இருக்கும். நீண்டவால் கொண்டவை. இக்குரங்குகள் ஒன்பது அல்லது பத்து உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமாக வாழும்.[2] இதன் முதன்மை உணவு பழங்கள், இலைகள், தண்டுகள் ஆகும். சிலசமயம் விளைநிலங்களை வேட்டையாடும். இவற்றின் எண்ணிக்கை, மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும்,"பாலுணர்வைத் தூண்டும் மருந்து" என்ற நம்பிக்கையாலும் வேட்டையாடப்படுவதால் குறைவடைந்ததன் பொருட்டு இது அழியவாய்ப்புள்ள இனம் என வகைபடுத்தப்பட்டுள்ளது.
Remove ads
வகைப்பாட்டியல்
நீலகிரி மந்தியின் உயிரியல் வகைப்பாடு சர்ச்சைக்குரியது. பாரம்பரியமாக இது டிராக்கிபிதேகஸ் பேரினத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. இது மண்டையோட்டு உருவவியல் மற்றும் பிறந்த குழந்தையின் நிறம் போன்ற உருவ ஒற்றுமைகள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. டி. என். ஏ. மற்றும் பிற சான்றுகள், நீலகிரி மந்தி மற்றும் ஊதா முக மந்தி ஆகியவை சாம்பல் நிற மந்தியுடன் மிகவும் நெருக்கமாக இனத் தொடர்புடையவை. இதனால் செம்னோபிதேகசு இனத்திற்குள் இவை மீண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[3][4][5][6][7][8]
Remove ads
விளக்கம்
தலையும் உடலும் சேர்ந்த நீளமானது முதிர்வடைந்த ஆண்களில் 78 முதல் 80 செ. மீ. வரையும், பெண்களில் 58- முதல் 60 செ. மீ. நீளமுடையது. வாலானது முறையே 68.5 மற்றும் 96.5 செ.மீ. நீளமுடையது. ஆண்களின் எடை 9.1 முதல் 14.8 கிலோ வரையும் பெண் எடையானது 10.9 முதல் 12 கிலோ வரையுள்ளது.[9] கர்ப்ப காலம் துல்லியமாக அறியப்படாத போதிலும், அனுமன் மந்திக்கு ஒத்ததாக அதாவது 200 நாட்கள் எனக் கருதப்படுகிறது.[9]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads