சிரம்பான் மாவட்டம்
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிரம்பான் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Seremban; ஆங்கிலம்: Seremban District; சீனம்: 芙蓉县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். சிரம்பான் மாவட்டத்தின் முக்கிய நகரம் சிரம்பான் (Seremban) நகரம். அதுவே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 54 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 86 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும்; அமைந்து உள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒரு மாவட்டம் ஆகும்.
Remove ads
நிர்வாகம்
புதிதாக உருவாக்கப்பட்ட சிரம்பான் மாநகராட்சி; சிரம்பான் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது. 1 சனவரி 2020-இல் சிரம்பான் மாநகராட்சி; மற்றும் நீலாய் நகராட்சி ஆகிய இரு மன்றங்களும் ஒன்றிணைக்கப் பட்டன. அதன் மூலம் சிரம்பான் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
சிரம்பான் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
சிரம்பான் மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 முக்கிம்கள் உள்ளன.
Remove ads
நகரப் பகுதிகள்
சிரம்பான் மையப் பகுதி
சிரம்பான் மாநகரத்தின் மையப் பகுதிகள்; சிரம்பான் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.
- சிரம்பான் (Seremban)
- ராசா (Rasah)
- ராசா ஜெயா (Rasah Jaya)
- மம்பாவ் (Mambau)
- செனவாங் (Senawang)
- தெமியாங் (Temiang)
- லோபாக் (Lobak)
- பாரோய் (Paroi)
- புக்கிட் செடாங் (Bukit Chedang)
- புக்கிட் புளாசம் (Bukit Blossom)
- சிரம்பான் 2 (Seremban 2)
- அம்பாங்கான் (Ampangan)
- ஆக்லாந்து (Oakland)
- புக்கிட் கெபாயாங் (Bukit Kepayang)
- கெமாயான் (Kemayan)
- சிக்காமாட் (Sikamat)
- பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan)
- தாமான் பெர்மாய் (Taman Permai)
சிரம்பான் புறப்பகுதி
சிரம்பான் மாநகரத்தின் புறப் பகுதிகள்; நீலாய் நகராட்சிக் கழகத்தின் (Nilai Municipal Council) அதிகார வரம்பிற்குள் வருகின்றன.
- நீலாய் (Nilai)
- பண்டார் பாரு நீலாய் (Bandar Baru Nilai)
- ரந்தாவ் (Rantau)
- மந்தின் (Mantin)
- சுங்கை காடுட் (Sungai Gadut)
- லாபு (Labu)
- லெங்கெங் (Lenggeng)
- தாமான் சிரம்பான் ஜெயா (Taman Seremban Jaya)
- பண்டார் சிரம்பான் செலாத்தான் (Bandar Seremban Selatan)
- தாமான் துங்கு ஜாபார் (Taman Tuanku Jaafar)
- ராசா கெமாயான் (Rasah Kemayan)
- பந்தாய் (Pantai)
- உலு பெரணாங் (Ulu Beranang)
- பாஜம் (Pajam)
Remove ads
சிரம்பான் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
மலேசியா; நெகிரி செம்பிலான்; சிரம்பான் மாவட்டத்தில் (Seremban District) 19 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
Remove ads
காட்சியகம்
- சிரம்பான் பொது மருத்துவமனை
- பால் மால் வணிக மையம்
- சிரம்பான் இந்து ஆலயம்
- சிரம்பான் நகரத்தில் ஒரு சாலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads