நெகிரி செம்பிலான் துவாங்கு முகிரிஸ்

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 11-ஆவது யாம் துவான் பெசார் From Wikipedia, the free encyclopedia

நெகிரி செம்பிலான் துவாங்கு முகிரிஸ்
Remove ads

துவாங்கு முகிரிஸ் அல்லது நெகிரி செம்பிலான் துவாங்கு முகிரிஸ்; (ஆங்கிலம்: Tuanku Muhriz ibni Almarhum Tuanku Munawir; மலாய்: Tuanku Muhriz ibni Almarhum Tuanku Munawir); (பிறப்பு: 14 சனவரி 1948) என்பவர் 2008-ஆம் ஆண்டு முதல் மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 11-ஆவது யாம் துவான் பெசார் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் துவாங்கு முகிரிஸ் துங்கு முனாவிர் Tunku Muhriz Tunku Munawir Yang di-Pertuan Besar of Negeri Sembilan, யாம் துவான் பெசார் ...

மலேசியாவின் இதர மாநிலங்களில் சுல்தான் என அழைக்கப்படும் அரச பதவி; நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும் யாம் துவான் பெசார் அல்லது யாங் டி பெர்துவான் பெசார் என்று அழைக்கப்படுகிறது.

Remove ads

வாழ்க்கை

மறைந்த யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முனாவிர் அவர்களின் ஆறு பிள்ளைகளில் துவாங்கு முகிரிஸ் ஒரே மகன் ஆவார். துவாங்கு முனாவிர் 1960-ஆம் ஆண்டில் இருந்து 1967-ஆம் ஆண்டு வரை நெகிரி செம்பிலான் மாநிலத்தை ஆட்சி செய்தவர் ஆவார்.

1948-ஆம் ஆண்டில் பிறந்த துவாங்கு முகிரிஸ், தொடக்கநிலைக் கல்வியை கோலா பிலா துவாங்கு முகமது பள்ளியிலும்; இடைநிலைக் கல்வியை தம்பின் துங்கு பெசார் பள்ளியிலும் பெற்றார். பின்னர் உயர்நிலைக் கல்வியை சிரம்பான் கிங் ஜார்ஜ் V பள்ளியில் பெற்றார்.[2]

பாங்காக் வங்கியின் இயக்குநர்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஆல்டென்காம் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அதன் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் வேல்சு பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டத் துறையில் பட்டம் பெற்றார்.

1973-ஆம் ஆண்டில் மலேசியாவில் உள்ள ஒரு பன்னாட்டு வங்கியில் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அதே வங்கியின் இயக்குனரானார். அடுத்தக் கட்டமாக 1981-ஆம் ஆண்டில் அவர் மலேசிய கூட்டு விளம்பர நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்றார். அதன் பின்னர் அவர் 2006-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்து பாங்காக் வங்கியின் இயக்குநர் குழுவில் பொறுப்பு வகித்து வருகிறார்.

Remove ads

செரி மெனாந்தியின் துங்கு பெசார்

1961-ஆம் ஆண்டில், துவாங்கு முகிரிஸ் அவர்களின் தாத்தா துங்கு பெசார் புர்கானுதீன் இறந்ததைத் தொடர்ந்து, துவாங்கு முகிரிஸ் செரி மெனாந்தியின் துங்கு பெசாராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், 1967-ஆம் ஆண்டில், அவரின் தந்தையார் இறந்த பின்னர், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் உண்டாங் ஆட்சிமுறை பேரவையினர் எடுத்த முடிவினால், துவாங்கு முகிரிஸ் யாம் துவான் பெசார் ஆனார். அந்த வகையில் அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10-ஆவது யாம் துவான் பெசார் (Yamtuan Besar of Negeri Sembilan) ஆகும்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஓர் ஆட்சியாளர் காலமாகி விட்டால், அவரின் மகன்களில் இருந்து முதலில் பொருத்தமான மற்றும் திறமையான ஆட்சியாளரை உண்டாங் ஆட்சிமுறை பேரவையினர் தேர்ந்தெடுக்க வேண்டும்; அடுத்த நிலையில் இறந்த ஆட்சியாளரின் சகோதரர்கள், பின்னர் தந்தைவழி மாமன்கள், பேரன்கள், சகோதரர்களின் மகன்கள் மற்றும் தந்தைவழி மாமன்களின் மகன்கள் ஆகியோரின் வரிசையில் அந்தத் தேர்வு நடைபெற வேண்டும் என்று நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

யாங் டி பெர்துவான் பெசார்

29 டிசம்பர் 2008 அன்று, உண்டாங் ஆட்சிமுறை பேரவையினர் துவாங்கு முகிரிஸ் அவர்களை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 11-ஆவது யாம் துவான் பெசார் என்று அறிவித்தது.[3] இருப்பினும் தன்னடக்கம் கொண்ட இவரின் பழக்கம் காரணமாக, தொடக்க காலங்களில் துவாங்கு முகிரிஸ் நெகிரி செம்பிலான் அரச வட்டங்களுக்கு வெளியே பெரும்பாலும் அறியப்படாமல் இருந்தார்.

மலேசியாவில் முக்கியப் புள்ளிகள் பலர் துவாங்கு முகிரிஸின் அடக்கமான, கண்ணியமான ஆளுமை; மற்றும் அவரின் வெற்றிகரமான தொழில் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, அவரை நெகிரி செம்பிலானின் ஆட்சியாளராகக் கொண்டு வருவதற்கு ஆதரவு அளித்ததாகவும் அறியப்படுகிறது. அத்துடன் அவரின் தந்தையார் மரணத்திற்குப் பிறகு, பாரம்பரியத்தின்படி, அவர் அரியணைக்கு சரியான வாரிசாகவும் இருந்தார்.

சிறப்பான பேச்சாற்றல்

துவாங்கு முகிரிஸ் தன் வாழ்நாள் முழுவதும் உண்டாங்குகளுடன் நல்ல நட்புறவுகளைப் பேணி வந்தார். நெகிரி செம்பிலான் மக்களுடனும் அணுக்கமான உறவுகளை நிறுவி நன்கு பராமரித்து வந்தார். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசியல் வட்டாரங்களில் அவருக்கு ஆதரவாளர்கள் இருந்தார். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ முகமது இசா அப்துல் சமாட் இவரின் முதன்மையான அரசியல் ஆதரவாளர்களில் ஒருவராகும்.

துவாங்கு முகிரிஸ் நன்கு படித்தவர்; சிறப்பான பேச்சாற்றல் கொண்டவர்; சிறந்த குணாதிசயங்களைக் கொண்டவர்; விளம்பரத்தைத் தவிர்ப்பவர்; கண்ணியமான மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தி வருபவர்; பாரம்பரிய வழிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

Remove ads

விருதுகள்

நெகிரி செம்பிலான் விருதுகள்

மலேசியா

மேற்கோள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads