நெல்லியம்பதி

From Wikipedia, the free encyclopedia

நெல்லியம்பதி
Remove ads

நெல்லியம்பதி (Nelliampathi) இது இந்தியா நாட்டில் கேரளம் மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மலை வாழிடம் ஆகும். இது ஏறத்தாள 60 கி.மீ. உயரத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் நெல்லியம்பதி மலை നെല്ലിയാമ്പതിNelliampathi, Country ...
Remove ads

நிலவியல்

இங்கு உள்ள பகுதிகளில் டீ தயாரிக்க பயன்படும் தேயிலையும் மற்றும் காப்பியும் பயிரிடப்படுகிறது. இப்பகுதி சிற்றூர் வட்டத்திற்கு உட்பட்டதாகும். போத்துண்டி அணை இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. நெல்லியம்பதியின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள இந்த அணையானது 19 ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டதாகும்.

சீதார்குன்டு

நெல்லியம்பதியிலிருந்து 8 கிலோ மீற்றர்கள் தொலையில் அமைந்துள்ள இது ஒரு காட்சிக் கோணப் பகுதியாகும். இந்த இடத்தில்தான் சீதை, இராமர், இலட்சுமணன் ஆகியோர் வனவாசத்தின் போது தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.

கேசவன் பாறை

இந்த பகுதியில் மேலும் பார்க்க வேண்டிய இடம் கேசவன்பாறை ஆகும். இங்கு திரைப்படக் காட்சிகள் எடுக்கப்படுவதுண்டு.[1][2] மம்மூட்டி நடித்த மிருகயா திரைப்படம் இங்கு படமாக்கப்பட்டது.[3][4]

மக்கள் வகைப்பாடு

2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4,358 ஆண்களும், 4,360 பெண்கள் உட்பட மொத்த மக்கள் தொகை 8,718 பேர் உள்ளனர்.[5]

காட்சித் தொகுப்பு


மேற்கோள்கள்

வெளி இனைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads