நெவ்ஷீர் மாகாணம்

துருக்கியில் ஒரு மாகாணம் From Wikipedia, the free encyclopedia

நெவ்ஷீர் மாகாணம்
Remove ads

நெவ்ஷீர் மாகாணம் (Nevşehir Province, துருக்கியம்: Nevşehir ili, பாரசீக மொழியில் "புதிய நகரம்" என்று பொருள்) என்பது நடு துருக்கியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மாகாணத்தின் தலைநகராக நெவ்ஷீர் நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள மாகாணங்களாக வடமேற்கில் கோரேஹிர், தென்மேற்கே அக்சராய் , தெற்கே நீட், தென்கிழக்கே கெய்சேரி, வடகிழக்கில் யோஸ்கட் ஆகியவை உள்ளன. துருக்கியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கப்பாடோசியா என்ற பகுதி நெவ்ஷீர் மாகாணத்துக்கு உள்ளடங்கியது. கோரெம் நகரமும் நெவ்ஷீரில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் நெவ்ஷீர் மாகாணம் Nevşehir ili, நாடு ...

இந்த மாகாணம் கோரெமின் தேவதை புகைபோக்கிகள், ஆர்டாஹிசர் (நடுத்தர கோட்டை) போன்றவையும், பைசந்தியர் காலத்தைச் சேர்ந்த பல பழைய தேவாலயங்களுக்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Remove ads

வரலாறு

தொல்லியல்

ஏறக்குறைய 5,000 ஆண்டுகள் பழமையான மூன்று அடுக்கு கொண்ட நிலத்தடி நகரமானது, உள்ளூர் மக்களால் “கிர்-கோர்” என்று குறிப்பிடப்படுகிறது. இது 2019 இல் உள்ளூர் வாசிகளால் வெளிப்படுத்தபட்டது. ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நகரம் மூன்று தளங்கள், வீடுகள், சுரங்கங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஒரு சிறிய மனித உருவத்தை உள்ளடக்கியது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இத் தளமானது "குணப்படுத்தும் நீர்" மற்றும் " சீசரின் குளியல்" ஆகியவற்றின் அமைவிடமாக கருதப்படுகிறது. [2] [3] [4]

Remove ads

மாவட்டங்கள்

நெவஷீர் மாகாணம் 8 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • அககல்
  • அவனோஸ்
  • டெரிங்குயு
  • கலீஹிர்
  • ஹெசிபெக்டாஸ்
  • கோசக்லே
  • நெவஹிர்
  • உர்குப்

காட்சியகம்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads