அக்சராய் மாகாணம்

துருக்கியின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

அக்சராய் மாகாணம்
Remove ads

அக்சராய் மாகாணம் (Aksaray Province துருக்கியம்: Aksaray ili ) என்பது மத்திய துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இதன் அருகிலுள்ள மாகாணங்களாக மேற்கு மற்றும் தெற்கே கொண்யா, தென்கிழக்கில் நீட், கிழக்கே நெவஹிர் மற்றும் வடக்கே கோரேஹிர் ஆகியவை உளன. இதன் பரப்பளவு 7,626 சதுர கிலோமீட்டர்கள் (2,944 sq mi) ஆகும். மாகாண தலைநகராக அக்சராய் நகரம் உள்ளது.

விரைவான உண்மைகள் அக்சராய் மாகாணம் Aksaray ili, நாடு ...
Thumb
அக்சராய் கிளிம், 18 ஆம் நூற்றாண்டு. கிலிம் அநேகமாக அக்சரே பிராந்தியத்தில் குடியேறிய ஹோடமிஸ் துர்க்மென் குழுவினரால் செய்யப்பட்டது. இது ஒரு இறுதி சடங்கிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம், பின்னர் உள்ளூர் பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

கப்படோசியா பகுதியில் உள்ள நான்கு மாகாணங்களில் அக்சராய் ஒன்றாகும், இதனுடன் நெவஹிர், நீடே மற்றும் கெய்சேரி ஆகிய மாகாணங்கள் உள்ளன. மேலும் 3,000-மீட்டர் (9,843 அடி) உயரமுள்ள எரிமலையான ஹசன் மலை அக்சராய் மற்றும் நீடே ஆகியவற்றுக்கு இடையே நிற்கிறது. சமவெளியில் கோடை காலம் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும், ஆனால் மலைப்பகுதியில் இருந்து நீர் ஓடிவரும் போது வசந்த காலத்தில் இப்பகுதி பசுமையானதாகவும் பூக்கள் பூத்துக் குலுங்குவதாகவும் இருக்கும். மாகாண எல்லைக்குள் 2,400 மீ² (0.59 ஏக்கர்) பரப்பளவுள்ள உவர் ஏரியான துஸ் கோலே ஏரி அமைந்துள்ளது, இது பெரிய அளவிலான சதுப்பு நிலத்தைக் கொண்டுள்ளது. இந்த ஏரி அதிகபட்சம் ஒரு மீட்டர் (3 அடி 3 அங்குலம்) ஆழம் கொண்டது.

Remove ads

மாவட்டங்கள்

அக்சராய் மாகாணம் 7 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகரம் தடித்து ):

  • அகாசோரன்
  • அக்ஸராய்
  • எஸ்கில்
  • குலாசி
  • கோஸ்லியர்ட்
  • ஓர்டகாய்
  • சரயாஹாய்

சொற்பிறப்பியல்

பழங்காலத்தில் இப்பகுதிக்கு ஆர்க்கெலிஸ் கர்சவுரா என்று பெயர் கொண்டதாக இருந்தது. இது செல்யூக் அரசமரபு காலத்தில் தக்ஷரா என்று மாற்றப்பட்டது, பின்னர் அக்சராய் என்று மாற்றபட்டது.

வரலாறு

Thumb
சுல்தான்ஹான் கேரவன்செராயின் உள் முற்றம்

நடு அனத்தோலியாவின் சமவெளிகளில் 8,000 ஆண்டுகளாக குடியேற்றங்கள் உள்ளன. மேலும் அக்சரைச் சுற்றியுள்ள சமவெளி பகுதியில் அக்காலத்திய குடியேறிய நாகரிகங்களின் நினைவுச்சின்னங்கள் உள்ளன. கோசல்காயா நகரில் உள்ள அக்லே ஹாய்கின் மேடு கி.மு. 5,000 க்கு முந்தைய ஒரு குடியேற்றத்தைக் குறிக்கிறது. (மேலும் மூளை அறுவை சிகிச்சையின் ஆரம்பகால பதிவாக, ஒடு அகற்றபட்ட செய்யப்பட்ட ஒரு பெண்ணின் மண்டை ஓடு காணப்பட்டது).

பின்னர் பட்டுப் பாதை இங்கு வந்தது, எனவே வணிகர்கள், பயணிளுக்காகன தங்குமிடத்துக்காக பெரிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. உரோமானியர், பைசாந்தியர், துருக்கியர் ஆட்சிக் காலங்களில் அக்சராய் நகரமும் அதன் சுற்றுப்புறமும் செழித்து வளர்ந்தன.

இன்று அக்சராய் கிராமப்புறங்களையும், விவசாயத்தையும் அடிப்படையாகக் கொண்ட மாகாணமாகும். இதன் மக்கள் சமயத்திலும், பழமையிலும் நம்பிக்கைக் கொண்டவர்காள உள்ளனர்.  1950 களில் இருந்து பலர் புலம்பெயர் தொழிலாளர்களாக ஐரோப்பாவுக்குச் சென்றுவிட்டனர். பெரும்பாலான நடு அனத்தோலியா மாகாணங்களை விட அக்சரேயின் மக்கள் தொகையில் குர்து மக்களின் விகிதாச்சாரத்தை நீண்ட காலமாக பேணிவந்தது. 1920 களில் ஷேக் சைட் கிளர்ச்சியைத் தொடர்ந்து குர்துக்களில் பலர் துன்செலி மற்றும் பிற கிழக்கு நகரங்களிலிருந்து மீளக்குடியமர்த்தப்பட்டனர்.[1]

ஆர்வமுள்ள இடங்கள்

Thumb
அக்ஸராய், இஹ்லாரா பள்ளத்தாக்கிலிருந்து ஒரு பார்வை
  • அக்லே ஹாயக் - அக்சராய் நகரிலிருந்து 25 கி.மீ கிழக்கே உள்ள ஒரு கற்காலக் குடியேற்றம்.
  • அசெம்ஹாய்க் - ஆரம்பகால வெண்கலக் கால குடியேற்றம், அக்சராய் நகரிலிருந்து வடமேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • அக்சராய் நகருக்கு அருகிலுள்ள ஹெல்வடெரே கிராமத்தில் உள்ள பண்டைய நகரமான நோரா.
  • இஹ்லாரா பள்ளத்தாக்கு - கோஸ்லியுர்ட் மாவட்டத்தில், அக்ஸாரே நகரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு
  • டாபினர் - அகாரைக்கு தெற்கே 27 கிலோமீட்டர் (17 மைல்) உள்ள இது தரைவிரிப்புகளுக்கு பெயர் பெற்றது
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads