நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி

From Wikipedia, the free encyclopedia

நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி
Remove ads

நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி (Loktantrik Samajwadi Party, Nepal) (நேபாளி: लोकतान्त्रिक समाजवादी पार्टी), நேபாள நாட்டின் நான்காவது பெரிய மாநிலக் கட்சியாகும்.[4] இக்கட்சி நேபாளத்தில் மாதேசி மக்கள் வாழும் மாநிலங்களில் குறிப்பாக மாதேஷ் மாநிலத்தில் பலமாக உள்ளது. இது மாதேசி மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறது. இக்கட்சி 18 ஆகஸ்டு 2021 நேபாளத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.[5][6]மகந்தா தாக்கூர் இப்புதிய கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார்.[7]கே. பி. சர்மா ஒளி அமைச்சரவையில் நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி சேர்ந்ததை அடுத்து ஏற்பட்ட பிளவால் இப்புதிய கட்சி நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி, நேபாளம், தலைவர் ...
Remove ads

2022 நேபாள பொதுத் தேர்தலில்

2022 நேபாள பொதுத் தேர்தலில் இக்கட்சி சார்பாக நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 4 உறுப்பினரகளும்; நேபாள தேசிய சபைக்கு 1 உறுப்பினரும்; மாதேஷ் மாநில சட்டமன்றத்திற்கு 9 உறுப்பினர்களும்; நகராட்சி தலைவர்களாக 16 பேரும்; நகராட்சி மன்ற உறுப்பினர்களாக 581 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads