மாதேஷ் மாநிலம்

நேபாள மாகாணம் From Wikipedia, the free encyclopedia

மாதேஷ் மாநிலம்
Remove ads

மாதேஷ் மாநிலம் (நேபாளி: मधेश प्रदेश) நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றாகும். இது நேபாளத்தின் தென்கிழக்கில் தராய் சமவெளியில் உள்ளது. இதன் தலைநகரம் ஜனக்பூர் ஆகும். இதன் பெரிய நகரம் வீரகுஞ்ச் ஆகும். இம்மாநிலத்தின் இந்தியா வம்சாவழியினரான மாதேசி மக்கள் அதிகம் வாழ்வதால் இம்மாநிலத்திற்கு மாதேஷ் மாநிலம் எனப்பெயராயிற்று. முன்னர் இம்மாநிலத்தை நேபாள மாநில எண் 2 என அழைத்தனர்.

விரைவான உண்மைகள் மாதேஷ் மாநிலம் प्रदेश नं० २, நாடு ...

இம்மாநிலம், 2015 அரசியல் அமைப்பு சட்டப்படி 20 செப்டம்பர் 2015 அன்று நிறுவப்பட்டது.[2]

17 சனவரி 2018ல் கூடிய மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனக்பூர் நகரம் இம்மாநிலத்தின் இடைக்காலத் தலநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2.[3]

அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், நேபாளத்தில் இரண்டாவதாக உள்ளது.[4]மேலும் பரப்பளவில், சிறிய மாநிலமாகும்.

Remove ads

எல்லைகள்

இம்மாநிலத்தின் கிழக்கிலும், வடக்கிலும் மாநில எண் 1 மற்றும் வடக்கிலும், மேற்கிலும் மாநில எண் 3 எல்லைகளாக உள்ளது. மேலும் தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலத்துடன் பன்னாட்டு எல்லைகள் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

9661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகை 5,404,145 ஆகும். [5]இம்மாநிலத்தின் மக்கள் மைதிலி மொழி, போஜ்புரி மொழி, இந்தி மொழி, நேபாளி மொழிகளை பேசுகின்றனர்.

அரசியல்

இம்மாநில சட்டமன்றத்தின் 107 உறுப்பினர்களுக்கான, தேர்தலில், 64 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 43 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும்; நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 32 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.

மாநில எண் 2ன் சட்டமன்றத் தேர்தல் 2017 முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் அரசியல் கட்சி, நேரடித் தேர்தலில் ...

அரசாங்கம்

மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி தலைமையிலான கூட்டணி அரசு அமைச்சரவை அமைத்தது. இம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி கட்சியின் முகமது லால் பாபு ரவுத் கத்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7]

நிர்வாகம்

இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக எட்டு மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

மேலதிகத் தகவல்கள் #, பெயர் ...

மாவட்டங்கள் மாநகராட்சிகளாகவும், துணை மாநகராட்சிகளாகவும், நகர்புற நகராட்சிகளாகவும், கிராம்ப்புற நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.



Thumb

மாநில எண் 2-இல் சமயங்கள்

  பிறர் (0.44%)
Thumb

மொழிகள்

  மைதிலி (45.30%)
  பஜ்ஜிகா (14.65%)
  நேபாளி (6.67%)
  உருது (5.87%)
  தாரு (3.77%)
  மகதி (0.57%)
  இந்தி (0.16%)
  பிற மொழிகள் (4.44%)
Remove ads

புவியியல்

நேபாளத்தின் தராய் சமவெளியில் அமைந்த இம்மாநிலத்தின் கிழக்கில் கோசி ஆறும் மற்றும் பாக்மதி ஆறு, கமலா ஆறு, லக்கந்தேய் ஆறு, விஷ்ணமதி ஆறுகளும் பாய்கிறது.

போக்குவரத்து

மலைகள் அற்ற சமவெளியில் அமைந்த இம்மாநிலத்தில் போக்குவரத்து வசதிகள் நன்குள்ளது.

சாலைகள்

மகேந்திரா நெடுஞ்சாலை இம்மாநிலத்தில் கிடைமட்டத்தில் செல்வதால், நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியின் நகரங்கள், இம்மாநிலத்தின் வீரகுஞ்ச் மற்றும் ஜனக்பூர் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. [8] திரிபுவன் நெடுஞ்சாலை இம்மாநிலத்தின் வழியாக நாட்டின் தலைநகரம் காட்மாண்டு நகரத்தையும் மற்றும் இந்திய நகரங்களையும் இணைக்கிறது. [9]

வானூர்தி நிலையங்கள்

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads