பக்கான் மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பக்கான் மாவட்டம் (மலாய்: Daerah Pakan; ஆங்கிலம்: Pakan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சரிக்கே பிரிவில் உள்ள ஒரு துணை மாவட்டம்; மற்றும் பக்கான் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது 924.6 சதுர கிலோமீட்டர்கள் (357.0 sq mi) பரப்பளவைக் கொண்டது. இந்நகரம் சரிக்கே நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த நகரம், முற்றிலும் நிலங்களால் சூழப்பட்ட நில அமைப்பைக் கொண்டுள்ளது. 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தத் துணை மாவட்டத்தின் மக்கள் தொகை மதிப்பீடு 15,462 ஆகும்.[4]
Remove ads
பொது
இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர் இபான் மக்கள் (95%+); மற்றும் சிறுபான்மை இனத்தவர்களாகச் சீனர்கள் உள்ளனர். சீனர்கள், பொதுவாக அதன் நகரப் பகுதியில் அதிகமாய் வாழ்கின்றனர்.
மலாய்க்காரர்களில் சிறுபான்மையினர் ஆசிரியர்கள், செவிலியர்கள், மாவட்ட அலுவலகர்கள்; மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்ற அரசாங்கத் துறைகளில் பணிபுரிகின்றனர்.
சொற்பிறப்பியல்
பாக்கான் என்ற பெயர் புவா பாக்கான் (Buah Pakan) என்ற டுரியான் உள்ளூர் பழத்திலிருந்து பெறப்பட்டது. இந்தப் பழம் மஞ்சள் நிறத் தோலையும் சதையையும் கொண்டுள்ளது.[5] பாக்கான் நகரத்தின் எண்டபாய் சாலைச் சந்திப்பில் நகரத்தின் அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
ஜுலாவ் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பக்கான் பகுதி, 1973 முதல் துணை மாவட்டமாக நிர்வாகிக்கப்பட்டது. 1 மார்ச் 2002 அன்று, இப்பகுதி ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டு சரிக்கே பிரிவின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. [6]
மக்கள்தொகையியல்
1991 முதல் 2000 வரை பக்கான் மாவட்ட மக்கள்தொகை 1.38% அளவுக்கு வளர்ச்சி அடைந்தது. இதற்கிடையில், 2000 முதல் 2010 வரை, 0.37% அளவுக்கு வளர்ச்சி அடைந்தது. [7]
பொருளாதாரம்
2019-ஆம் ஆண்டில் மலேசிய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவின் மிக ஏழ்மை நிலை மாவட்டமாக இந்த மாவட்டம் உள்ளது. சராசரி ஒரு குடும்பத்தின் மாத வருமானமாக மாதத்திற்கு RM 2,760 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இம்மாவட்டம் அரசு அமைச்சின் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்பட்டு வருகிறது.[8] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாவட்டத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 96.9% ஆக இருந்தது, 3.4% வேலையின்மை, 8,800 பேர் வேலையிலும், 300 பேர் வேலையில்லாமலும் உள்ளனர். [9]
Remove ads
நகரம் மற்றும் கிராமங்கள்
பக்கான்

பக்கான் மாவட்ட அலுவலகம் பாக்கன் மாவட்டத்தை நிர்வகிக்கிறது. [10]
நாங்க என்டை
செப்டம்பர் 2019 இல் நாங்க என்டை தார் சாலையுடன் இணைக்கப்பட்டது [11]
நாங்க வாக்

நங்க வாக்கை உலு ஜுலாவுடன் இணைக்கும் ஒரு சாலை உள்ளது.[12] 2016ம் ஆண்டு நிலவரப்படி, இப்பகுதியில் தண்ணீர், மின்சாரம் இல்லாத நிலை இங்குள்ளது. [13]
நாங்க காரா

இப்பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. [14]
உளு என்டபாய்
பக்கான் நகரத்திலிருந்து மூன்று மணி நேர பயணத்தில் உளு என்டபாய் அமைந்துள்ளது. இங்கு நங்கா கெமலிஹ் பொது சுகாதார மருத்துவமனை, [15] [16] எஸ்கே உலு என்தாபாய் (தொடக்கப்பள்ளி) ஆகியவை அமைந்துள்ளன. [17] ஒரு புதிய மருத்துவமனை, நிர்வாகத் தொகுதி, எஸ்.கே. உலு என்தாபாய்க்கு எதிரே உள்ள பணியாளர்கள் குடியிருப்புக் கொண்ட ஒரு மேம்பாட்டுத் திட்டம் 2017 இல் தொடங்கப்பட்டது.[18] இத்திட்டம் 2019 இல் கட்டுமானத்தைத் தொடங்கியது மார்ச் 2021 இல் 70% முன்னேற்றத்தை எட்டியது. [19]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads