பசிபிக் தீவுகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பசிபிக் தீவுகள் (Pacific Islands) எனப்படுபவை பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 20,000 முதல் 30,000 தீவுகளைக் குறிக்கும். ஆஸ்திரேலியா தவிர்ந்த மற்றையவை பொதுவாக மூன்று பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளன. அவை: மெலனேசீயா, மைக்குரொனேசியா, பொலினேசியா என்பவை. இங்கு வாழும் மக்கள் பசிபிக் தீவு மக்கள் என அழைக்கப்படுகின்றனர்.

பசிபிக் தீவுகள் சில நேரங்களில் கூட்டாக ஓசியானியா என அழைக்கப்படுகின்றன[1].
மெலெனேசியா என்பது கருப்புத் தீவுகள் எனப் பொருள்படும். இவை நியூ கினி, நியூ கலிடோனியா, செனாட் கெஸ் (டொரெஸ் நீரிணைத் தீவுகள்), வனுவாட்டு, பிஜி, மற்றும் சொலமன் தீவுகள் ஆகும்.
மைக்குரொனேசியா என்பது சிறிய தீவுகள் எனப் பொருள்படும். இவை மரியானாஸ், குவாம், வேக் தீவு, பலாவு, மார்சல் தீவுகள், கிரிபட்டி, நவூரு, மற்றும் மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் என்பனவாகும். இவற்றின் பெரும்பாலானவை நிலநடுக் கோட்டின் வடக்கே காணப்படுகின்றன.
பொலினேசியா என்பது பல தீவுகள் எனப் பொருள்படும். இவை நியூசிலாந்து, ஹவாய் தீவுகள், ரொட்டுமா, மிட்வே தீவுகள், சமோவா, அமெரிக்க சமோவா, தொங்கா, துவாலு, குக் தீவுகள், பிரெஞ்சுப் பொலினேசியா, ஈஸ்டர் தீவு ஆகியனவாகும். மூன்று வலயங்களிலும் இவையே மிகப் பெரியதாகும்.
இந்தப் பிராந்தியத்தின் தீவுகள் உயர் தீவுகள் மற்றும் தாழ் தீவுகள் என இரண்டு வலயங்களாக வகுக்கப்பட்டுள்ளன. எரிமலைகள் உயர் தீவூகளை அமைத்துள்ளன. இவை பொதுவாக கூடியளவு மக்களைக் கொள்ளக்கூடியது, மேலும் இவை வளம் மிக்க மண்ணைக் கொண்டுள்ளன. தாழ் தீவுகள் பொதுவாக கற்பாறைகளையும், பவழக் கற்பாறைகளையும் கொண்டுள்ளன. இவற்றின் மணல் பொதுவாக வளமற்றவை. மூன்று பிரிவுகளிலும் மெலனேசியா தீவுகளி பெரும்பாலானவை உயர் வலயத்தில் அமைந்துள்ளன. மற்றைய இரண்டு பிரிவு தீவுகள் தாழ் வலயத்தில் உள்ளன.
இவற்றை விட வேறு பல தீவுகளும் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளன. ஆனால் இவை ஓசியானியாவிற்குள் அடக்கப்பட்டிருக்கவில்லை. இவை எக்குவடோரின் கலாபகசுத் தீவுகள்; அலாஸ்காவின் அலூசியன் தீவுகள்; ரஷ்யாவின் சக்காலின், கூரில் தீவுகள்; தாய்வான்; பிலிப்பீன்ஸ்; தென் சீனக் கடல் தீவுகள்; இந்தோனீசியாவின் பெரும்பாலான தீவுகள்; மற்றும் ஜப்பான் ஆகியவை.
Remove ads
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads