பசில்கா

From Wikipedia, the free encyclopedia

பசில்கா
Remove ads

பசில்கா ('Fazilka, also known as Bangla) மேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பசிலிகா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.தேசிய நெடுஞ்சாலை 9 இந்நகரத்திலிருந்து செல்கிறது. இந்நகரம் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கருகில் உள்ளது.

விரைவான உண்மைகள் பசில்கா, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பசில்கா நகரத்தின் மக்கள் தொகை 76,492[1]அதில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% உள்ளனர். சராசரி எழுத்தறிவு 70.7% ஆக உள்ளது. மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 11% ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் பெரும்பான்மையோர் பஞ்சாபி மொழி பேசுகின்றனர்.

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

என் எச் 9 மற்றும் என் எச் 7 இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது.

இருப்புப் பாதை

இரண்டு நடைமேடைகள் கொண்ட பசில்கா தொடருந்து நிலையம், ஸ்ரீ கங்காநகர், அபோஹர் பெரோஷ்பூர், பதிண்டா மற்றும் தில்லி நகரங்களுடன் இணைக்கிறது. [2].[3]

அருகமைந்த வானூர்தி நிலையம்

அமிர்தசரஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் பதிண்டா உள்நாட்டு வானூர்தி நிலையங்கள், பசில்கா நகரத்திலிருந்து 90 கி மீ தொலைவில் உள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads