மரகதம்

From Wikipedia, the free encyclopedia

மரகதம்
Remove ads

மரகதம் (Emerald) பெரில் (Be3Al2(SiO3)6,) வகையைச் சேரந்த ஒரு கனிமம் ஆகும். மரகதம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இதில் மிகச்சிறிய அளவில் காணப்படும் குரோமியம், சிலவேளைகளில் மட்டும் அடங்கும் வனேடியம் மூலகங்களால் பச்சை நிறத்தைப் பெறுகிறது.[1]

விரைவான உண்மைகள் மரகதம், பொதுவானாவை ...

பெரில் ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையில் 10 வரை அளவீட்டைக் கொண்ட மோவின் உறுதி எண் முறையில் உறுதி எண் 7.5 தொடக்கம் 8 வரையான உறுதியெண்ணைக் காட்டுகின்றது.[1] கூடுதலான பச்சைக்கற்கள் உள்ளீட்டுப் பொருட்களைக் கொண்டிருக்கும். எனவே அவற்றின் நொறுங்குமை கூடுதலாகக் காணப்படுகிறது.

இக்கல்லைக் குறிக்கும் எமரல்ட் (emerald) என்ற ஆங்கிலப் பெயர் பச்சை நிறம் என்ற பொருள்படும் மரகதம் என்ற வடமொழி சொல்லில் இருந்து மருவியதாகும்.[2] ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் சிலை திருஉத்தரகோசமங்கையில் உள்ளது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் வாசிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads