பஞ்சாமிர்தம் (2008 திரைப்படம்)
2008இல் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்சாமிர்தம் (Panchamirtham) 2008இல் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம் .எழுத்து ,இயக்கம் ராஜு ஈஸ்வரன் இதில் ஜெயராம் (நடிகர்), பிரகாஷ் ராஜ் மற்றும் ராஜு ஈஸ்வரன் போன்றோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர் while அரவிந்து ஆகாசு, நாசர், சமிக்ஷா மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் தோன்றியுள்ளனர். இப்படத்தை அபிராமி ராமனாதன் தயாரித்திருந்தார். 2008 டிசம்பர் 25 அன்று வெளியிடப்பட்டது.
Remove ads
கதை
இக்கதை இராமாயணக் காலத்தில் தொடங்குகிறது. இராவணன்' பிரகாஷ் ராஜ் தனது மாமன் மாரீசனை மானாக உருமாறி சீதையை கவர்ந்துவர கட்டளையிடுகிறார். முதலில் மறுத்த மாரீசன் தனது மனைவியின் உயிருக்கு இராவணனால் ஆபத்து ஏற்படுமென என பயந்து இதற்கு சம்மதிக்கிறார். ஆனால் இராமன் விட்ட அம்பினால் மாரீசன் ஒரு பாறையாக மாறிவிடுகிறார். இப்போது, நவீன காலத்தில் கதை பயணம் செய்கிறது. ராஜாராம் நாசர் பெரிய தேயிலை தோட்டத்திற்கு உரிமையாளர். அவருக்கு உதவியாக சீதாவும் சரண்யா மோகன் சமையலில் ராம் என்பவரும் அரவிந்து ஆகாசு உதவியாக உள்ளனர் . ராம் மற்றும் சீதா இருவரும் நேசிகின்றனர். ராஜாராமின் உறவினர் (எம். எசு. பாசுகர் மற்றும் மயில்சாமி (நடிகர்) அவருடைய சொத்துகளை அபகரிக்க திட்டமிடுகின்றனர். இதற்காக சீதாவை மலையுச்சியிலிருந்து தள்ளி கொலை செய்யத் திட்டமிடுகின்றனர். தள்ளப்பட்ட சீதா நேராக மாரீசன் பாறையின் மேல் விழுந்ததால் அவர் தனது பழைய உருவை அடைகிறார். அதற்குப்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதையாகும்.
Remove ads
நடிகர்கள்
- ஜெயராம் (நடிகர்) - மாரீசன்
- பிரகாஷ் ராஜ் - இராவணன்
- நாசர் - ராஜாராம் மற்றும் மாணிக்கம் (இரு வேடங்களில்)
- அரவிந்து ஆகாசு -ஸ்ரீராமன்
- சரண்யா மோகன் - சீத்தா
- சுமிக்ஷா -மந்தாகினி
- கருணாஸ் - பாண்டி
- கஞ்சா கறுப்பு - முத்து
- எம். எசு. பாசுகர் - திருப்பதி
- மயில்சாமி (நடிகர்)
- ராஜு ஈஸ்வரன் - இடும்பன்
- இளவரசு - காசி
- ரெஜீனா கசான்ட்ரா - சீதா
தாயரிப்பு
அபிராமி ராமநாதன், நன்கு அறியப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மற்றும் அபிராமி மெகா மால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பஞ்சாமிர்தம் படத் தயாரிக்க விரும்பினார். இப்படத்தின் தொடக்க விழா 2008 ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்றது. இயக்குநர் கே. பாலசந்தர், கே.ஆர்.ஜி., கலைப்புலி எஸ். தாணு, கலைப்புலி சேகரன், சரத்குமார், ராதா ரவி, ராம நாராயணன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். பூஜையன்று நாசருடனான ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.[1][2] முன்னதாக நடிகர் விவேக் மற்றும் நடிகர் வடிவேல் நடிப்பதா இருந்தது [3] சரண்யா மோகன் நடித்திருக்கும் ஒரு பாடல் காட்சி நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமால் ஊட்டியில் படமாக்கப்பட்டது.[4]
ஒலித்தொகுப்பு
சுந்தர் சி. பாபு இதன் இசையை மேகொள்ள கவிஞர் வாலி பாடல்களை எழுதியுள்ளார்.[5]
விமர்சனம்
நவ் ரன்னிங் .காம் இவ்வாறு கூறியது : "பல நகைச்சுவை நடிகர்கள் நடித்து வெளிவந்த நகைச்சுவைப் படமாகும், அதன் இலக்கு குழந்தைகள் சிரிக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது" .[6] Indiaglitz wrote: "Panchamirtham is a laugh-riot".[7] ரெடிஃப் எழுதியது: அவர்கள் வாக்குறுதி கொடுத்தது போல் வேடிக்கையாக இல்லை என்றாலும், இந்த அணி சிரிக்க வைக்கிறது".[8] கோலிவுட். காம் எழுதியது: "பஞ்சாமிர்தம் ஒரு அற்புதமான உபசரிப்பு, ஆனால் துரதிருஷ்டவசமாக, தொலைக்காட்சியின் தாக்கங்கள் நிறைய இருந்தது".[9] பிகைன்ட்வுட் எழுதியது: நல்ல மதிப்பு மிக்கதாக உள்ளது[10]
Remove ads
மேற்கோள்கள்es
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads