பட்காம்
சம்மூ காசுமீரில் உள்ள ஒரு ஊர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்காம் (Budgam) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்தின் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் கடல்மட்டத்திலிருந்து 1610 மீட்டர் உயரத்தில் உள்ளது.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பட்காம் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 43,518 ஆகும். அதில் ஆண்கள் 26,461 மற்றும் பெண்கள் 17,057 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடிகள் 307 ஆக உள்ளனர். [1]
போக்குவரத்து
சாலை
தேசிய நெடுஞ்சாலை எண் 444 ஜம்மு காஷ்மீரின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.
இருப்புப் பாதை
ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை பட்காம் நகரத்தை ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்தநாக் மற்றும் பனிஹால் நகரங்களுடன் இணைக்கிறது. பட்காமில் தொடருந்து நிலையம் உள்ளது.[2]
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads