பட்லினா சிடேக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்லினா சிடேக் (ஆங்கிலம்; மலாய்: Fadhlina Sidek) (பிறப்பு: 16 அக்டோபர் 1977) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி, ஒரு வழக்கறிஞர். மலேசிய வரலாற்றில் முதல் பெண் கல்வி அமைச்சர்; நவம்பர் 2022 முதல் நிபோங் திபால் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.[1][2]
இவர் செப்டம்பர் 2021 முதல் நவம்பர் 2022 வரையில் மலேசிய மேலவையில் செனட்டராக பணியாற்றினார். பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (PKR) உறுப்பினரான இவர் சூலை 2022 முதல் மக்கள் நீதிக் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார்.
Remove ads
பொது
பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் டிசம்பர் 2022 முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றி வரும் இவர், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு இசுலாமிய குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞர் ஆவார்.
இவர் தன் சொந்த சரியா சட்ட நிறுவனமான தெதுவான் பட்லினா சித்திக் & அசோசியேட்ஸ் (Tetuan Fadhlina Siddiq & Associates) எனும் வழக்கறிஞர் நிறுவனத்தை நடத்தி வந்தார்.[3]
கல்வி
1994-இல், சிலாங்கூர், காஜாங் நகரில் இடைநிலைக் கல்வியை முடிப்பதற்கு முன்பு, செமினி நகரில் தன் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அவர் மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகத்தில் (International Islamic University of Malaysia) சேர்ந்து தன் படிப்பைத் தொடர்ந்தார்.[4]
2002-இல் வழக்கறிஞர் பட்டத்தைப் பெற்றார். அதன் பின்னர் 2008-இல் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.[3]
அரசியல்
2020-இல் மக்கள் நீதிக் கட்சியில் இணைந்ததன் வழியாக அவர் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அடுத்ததாக அவர் மக்கள் நீதிக் கட்சியின் சட்டம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான மகளிர் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டு சூலை மாதம் மக்கள் நீதிக் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2021 இல், அவர் புலாவ் பினாங் மாநிலத்தின் மலேசிய மேலவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[3]
மலேசியப் பொதுத் தேர்தல், 2022
2022 மலேசியப் பொதுத் தேர்தலில், அவர் நிபோங் திபால் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில அப்போதைய பாரிசான் நேசனல் வேட்பாளர் மன்சர் ஓசுமான் என்பவரை 16,293 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[3]
தேர்தல் முடிவுகள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads