பத்தும் நிசங்க

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பத்தும் நிசங்க (Pathum Nissanka, சிங்களம்: පැතුම් නිස්සංක , பிறப்பு: 18 மே 1998) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காகத் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் 2021 மார்ச் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார்.[1]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

உள்நாட்டுப் போட்டிகள்

பத்தும் தனது முதலாவது பட்டியல் அ போட்டியில் அம்பாந்தோட்டை மாவட்ட அணியில் 2017 மார்ச் 17 இல் விளையாடினார்.[2] முதலாவது இருபது20 போட்டியை பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்காக 2018 இல் விளையாடினார்.[3]

2018 இல், இவர் 2017-18 சூப்பர் 4 மாகாணச் சுற்றிலும்,[4][5] 2018 மாகாண ஒருநாள் தொடரிலும் கண்டி அணியில் விளையாடினார்.[6] தொடர்ந்து, 2019 மாகாண ஒரு-நாள் சுற்றிலும் கண்டி அணிக்காக விளையாடினார்.[7]

பன்னாட்டுப் போட்டிகள்

2019 சனவரியில், பத்தும் இலங்கை-ஏ அணியில் முதல்-தரப் போட்டிகளில் அயர்லாந்து-ஏ அணியுடன் விளையாட சேர்க்கப்பட்டார். இரண்டு ஆட்டங்களில் இவர் 258 ஓட்டங்களை இலங்கை அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார்.[8] 2019 பெப்ரவரியில் இவர் தனது 1,000-வது ம்,உதல்-தர ஓட்டங்களைப் பெற்றார்.[9][10] 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2019 நவம்பரில் விளையாடினார்.[11][12]

2021 பெப்ரவரியில், இலங்கையின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வரையிட்ட நிறைவுகள் அணியில் சேர்க்கப்பட்டார்.[13] தனது முதலாவது பன்னாட்டு இருபது20 (ப20இ) போட்டியில் 2021 மார்ச் 3 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார்.[14] பின்னர், இலங்கையின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.[15] தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை 2021 மார்ச் 10 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார்.[16] தனது முதலாவது தேர்வுப் போட்டியை 2021 மார்ச் 21 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி,[17] ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் 103 ஓட்டங்களை எடுத்து, முதலாவது தேர்வுப் போட்டியில் சதம் எடுத்த நான்காவது இலங்கை வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[18]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads