தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2019 தெற்காசியா விளையாட்டுப் போட்டிகள் (2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்), இது நேபாள நாட்டில் நடைபெறும் 13-வது தெற்காசியா விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு தெற்காசியா நாட்டில் நடைபெறும்.

விரைவான உண்மைகள் நடத்தும் நகரம், நாடு ...

13-வது தெற்காசியா விளையாட்டுப் போட்டிகள் நேபாள நாட்டின் தேசியத் தலைநகரம் காட்மாண்டு மற்றும் பொக்காரா, ஜனக்பூர் ஆகிய மூன்று நகரங்களில் டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மாலைதீவுகள், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஏழு தெற்காசிய நாடுகளின் 2,175 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை நேபாளக் குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி 1 டிசம்பர் 2019 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள தசரத ரங்கசாலை விளையாட்டரங்கத்தில் துவக்கி வைத்தார்.[4][5][6][7] இதில் 308 போட்டிகள் கொண்ட 28 விளையாட்டுக்களில், ஏழு தெற்காசியா நாடுகளின் 2715 விளையாட்டு வீரர்களும், வீரங்கனைகளும் பங்கு பெறுகிறார்கள்.

Remove ads

நிகழ்ச்சி நிரல்

நேபாளத்தின் தேசியத் தலைநகரம் காட்மாண்டு மற்றும் பொக்காரா, ஜனக்பூர் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

[5]

நேபாளாத்தில் 2019 தெற்காசிய விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள்
Thumb
தசரத ரங்கசாலை விளையாட்டரங்கம், காத்மாண்டு
Thumb
பொக்காரா விளையாட்டரங்கம்
Thumb
திரிபுவன் பல்கலைக் கழக கிரிக்கெட் விளையாட்டரங்கம்

காட்மாண்டு

மேலதிகத் தகவல்கள் இடம், விளையாட்டுகள் ...

பொக்காரா

மேலதிகத் தகவல்கள் இடம், விளையாட்டுகள் ...

ஜனக்பூர்

மேலதிகத் தகவல்கள் இடம், விளையாட்டுகள் ...
Remove ads

விளையாட்டின் சின்னம்


நேபாள அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் 13 மே 2019 அன்று, தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளான்று ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு ஓடும் வீரர்களின் பனியனில் தெற்காசியாவில் மட்டும் காணப்படும் புல்வாய் எனும் ஒரு வகை மானை உருவம் பனியனில் இருக்கும்.[1][8]

தெற்காசிய ஒலிம்பிக் குழு, நேபாளத்தின் உலகப்பாரம்பரியக் களங்களின் பின்னணியில் பறக்கும் புறாவை 2019 தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக அறிவித்துள்ளது.[8]

Remove ads

நாடுகளும், விளையாட்டு வீரர்களும்

பங்குபற்றும் நாடுகள்

ஏழு தெற்காசியா நாடுகளின் 2,717 விளையாட்டு வீரர்கள் விவரம்:

  1. வங்காளதேசம் - 470 விளையாட்டு வீரர்கள்
  2. பூட்டான் - 116 விளையாட்டு வீரர்கள்
  3. இந்தியா - 487 விளையாட்டு வீரர்கள்
  4. மாலத்தீவுகள் - 216 விளையாட்டு வீரர்கள்
  5. நேபாளம் - 516 விளையாட்டு வீரர்கள்
  6. பாகிஸ்தான் - 263 விளையாட்டு வீரர்கள்
  7. இலங்கை - 564 விளையாட்டு வீரர்கள்

விளையாட்டுகள்

பதக்கப் பட்டியல்

10 டிசம்பர் 2019 அன்று பிற்பகலில் முடிவடைந்த 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களை வென்று (மொத்தம் 312 பதக்கங்கள்) முதலிடத்தையும், நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலப் பதக்கங்கள் (மொத்தம் 206) வென்று இரண்டாமிடத்தையும், இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலம் பதக்கங்களுடன் (மொத்தம் 251) மூன்றாமிடத்தையும், வங்காளதேசம் 19 தங்கம், 32 வெள்ளி, 87 வெண்கல பதக்கங்கள் வென்று (மொத்தம் 138) நான்காம் இடத்தையும், பாகிஸ்தான் 31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலப் பதக்கங்கள் வென்று (மொத்தம் 131) ஐந்தாம் இடத்தையும், மாலைத்தீவுகள் ஒரு தங்கம், 4 வெண்கலப் பதக்கங்கள் வென்று ஆறாம் இடத்தையும், பூட்டான் 7 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்கள் வென்று ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது.[9][10][11]

  விளையாட்டுகள் நடத்தும் நாடு
மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...
Remove ads

தொலைக்காட்சி உரிமை

2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டுகளை நடத்தும் நேபாள ஒலிம்பிக் குழு, விளையாட்டு நிகழ்வுகளை வெளிநாடுகளில் ஒளி பரப்பும் உரிமையை இந்தியாவின் என் கே மீடியா நிறுவனத்திற்கு[12] விற்றுள்ளது.[13] நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை நேபாளத் தொலைக்காட்சி, எபிஐ தொலைக்காட்சி மற்றும் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads