பத்ராச்சலம்

From Wikipedia, the free encyclopedia

பத்ராச்சலம்
Remove ads

பத்ராச்சலம் (Bhadrachalam) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இந்நகரத்தில் பாயும் கோதாவரி ஆற்றின் கரையில், இராமருக்கு அர்பணிக்கப்பட்ட புகழ் பெற்ற பத்திராசலம் கோவில் இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் பத்ராச்சலம் భద్రాచలముபத்ராத்திரி, நாடு ...
Thumb
பத்திராசலம் கோவில் ஓவியங்கள், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம்

பத்திராச்சலம் நகரம் தெலுங்கானா மாநிலத்தலைநகரான ஐதராபாத்திலிருந்து கிழக்கே 325 கிலோ மீட்டர் தொலைவிலும், கம்மம் நகரத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

Remove ads

வரலாறு

வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குமனருடன் இராமர், பத்ராச்சலம் மலைப்பகுதியில் சில காலம் தங்கி இருந்ததாக இராமாயண காவியம் கூறுகிறது. பத்திராசலம் மலைப் பகுதியில் இராமர் தங்கியிருந்த நினைவை குறிக்கும் வகையில் 17-ஆம் நூற்றாண்டில் கஞ்சேர்லா கோபன்னா என்பவர் (370 ஆண்டுகளுக்கு முன்னர்) பத்திராசலம் இராமர் கோயிலைக் கட்டினார்.[3]

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பத்ராச்சலம் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 50,087 ஆகும். அதில் ஆண்கள் 24,834; பெண்கள் 25,253 ஆக உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1017 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.77 % ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 88.02 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 77.65 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 5,232 ஆக உள்ளது. [4]

மக்கள் தொகையில் இந்துக்கள் 91.96%,; இசுலாமியர்கள் 5.55%; கிறித்தவர்கள் 2.07%; மற்றவர்கள் 0.07% ஆக உள்ளனர். இந்நகரத்தில் தெலுங்கு மொழி பேசப்படுகிறது.

Remove ads

போக்குவரத்து வசதிகள்

பத்ராசலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது. பத்ராச்சலத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பத்ராச்சலம் ரோடு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads