பரத்பூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரத்பூர் (Bharatpur), மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றான பரத்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.

பரத்பூர் நகரம் புதுதில்லிருந்து தெற்கில் 180 கி மீ தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரிலிருந்து 178 கி மீ தொலைவிலும்; ஆக்ராவிலிருந்து மேற்கே 34 கி மீ தொலைவிலும்; பதேப்பூர் சிக்ரியிலுருந்து 22 கி மீ தொலைவிலும்; கிருஷ்ண ஜென்மபூமியான மதுராவிலிருந்து 34 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் பரத்பூர் நகரம் இராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் கோட்டத்தின் தலைமையிடமாகும்.
இந்திய விடுதலைக்கு முன்னர் வரை பரத்பூர் நகரம், பரத்பூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது.
புதுதில்லி தேசிய தலைநகர் வலயத்தில் பரத்பூர் நகரம் இணைக்கப்பட்டுள்ளது.[1]
பரத்பூர் நகரம் இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாயிலாக அமைந்துள்ளது.[2] பரத்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள கேவலாதேவ் தேசியப் பூங்காவை யுனேஸ்கோ நிறுவனம், 1985-ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.
பரத்பூர் தில்லி - ஜெய்ப்பூர் - ஆக்ரா முக்கோணத்தில் அமைந்த நகரமாகும்.
Remove ads
வரலாறு

பரத்பூர் ஆட்சியாளர்கள் இந்தோ-சிதியர்களின் வழித்தோன்றல்களான இராஜபுத்திர ஜாட் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜாட் மன்னர்கள் பரத்பூர் சமஸ்தானத்தை 1670 முதல் 1947 முடிய ஆண்டனர்.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பரத்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 252,342 ஆக உள்ளது. அதில் 133,780 ஆண்களும்; 118,562 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 886 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. சதுர சராசரி படிப்பறிவு 81.02 % ஆக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 32,335 ஆக உள்ளது. [3]
சமயம்
இந்நகரத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 235,910 (93.30 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 9,363 (3.70 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 1,845 (0.73 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 4,917 (1.94 %) ஆகவும்; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.
மொழிகள்
இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், விரஜ மொழி, பஞ்சாபி, உருது மற்றும் இராஜஸ்தானி போன்ற வட்டார மொழிகளும் இந்நகரத்தில் பேசப்படுகிறது.
Remove ads
போக்குவரத்து
தொடருந்து
தில்லி - மும்பை செல்லும் இருப்புப்பாதையில் பரத்பூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளதால், தில்லி, ஆக்ரா, கோட்டா, சூரத், பாட்னா, அமிர்தசரஸ், வாரணாசி, லக்னோ, கான்பூர், ஜம்முதாவி, இந்தூர், மதுரா, தன்பாத், கயா, ஜோத்பூர், அலகாபாத், உதய்பூர், பரிதாபாத், அஜ்மீர், டேராடூன் போன்ற முக்கிய நகரங்களுக்கு தொடருந்து போக்குவரத்திற்கு வசதியாக உள்ளது.
சாலைகள்
ஜெய்ப்பூர் வழியாக பிகானேர் - ஆக்ரா செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 11 பரத்பூர் வழியாக செல்வதால், பேரூந்துப் போக்குவரத்திற்கு எளிதாக உள்ளது.
படக்காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads