பர்சா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

பர்சா மாகாணம்
Remove ads

பர்சா மாகாணம் (Bursa Province, துருக்கியம்: Bursa ili ) என்பது துருக்கியின், வடமேற்கு அனத்தோலியாவின், மர்மாரா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மாகாணமாகும். இந்த மாகாணத்தின் எல்லைகளாக மேற்கில் பாலகேசீர், தெற்கே கெட்டஹ்யா, கிழக்கில் பிலெசிக் மற்றும் சாகர்யா, வடகிழக்கில் கோகேலி மற்றும் வடக்கே யலோவா ஆகிய மாகாணங்கள் உள்ளன. இந்த மாகாணத்தின் பரப்பளவு 11,043  கி.மீ. 2 ஆகும். 2018 ஆண்டு நிலவரப்படி மாகாணத்தின் மக்கள் தொகை 2,994,521 ஆகும். [2] இதன் போக்குவரத்துக் குறியீடு 16 ஆகும்.

விரைவான உண்மைகள் பர்சா மாகாணம் Bursa ili, நாடு ...

பர்சா மாகாண மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் ( புர்சா நகரம் உள்பட) மர்மாரா பிராந்தியத்தில் அமைந்துள்ளன. ஆனால் பய்கோர்ஹான், ஹர்மன்காக், கெல்ஸ், ஓர்ஹெனெலி போன்ற மாவட்டங்கள் ஏஜியன் பிராந்தியத்தில் அமைந்துள்ளன.

1326 மற்றும் 1365 க்கு இடையில் புர்சா நகரம் உதுமானியப் பேரரசின் தலைநகராக இருந்தது. பின்னர் 1365 மற்றும் 1453 க்கு இடைக்காலம் வரை புதிய உதுமானியப் பேர்ரசின் தலைநகராக இருந்தது. 1453 இல் கான்ஸ்டண்டினோப்பிள் கைப்பற்றபட்டபிறகு அது இறுதியாக உதுமானியப் பேரரசின் தலைநகராக மாறியது.

Remove ads

மாவட்டங்கள்

  • பஹிகோஹான்
  • ஜெம்லிக்
  • கோர்சு
  • ஹர்மன்காக்
  • இன்னேகோல்
  • இஸ்னெக்
  • கராகபே
  • கெல்ஸ்
  • கெஸ்டல், பர்சா
  • முடன்யா
  • முஸ்தபகேமல்பனா
  • நிலாஃபர், பர்சா
  • ஆர்ஹனேலி
  • ஒர்ஹங்காசி
  • உஸ்மங்காசி
  • யெனிசெஹிர், பர்சா
  • யால்டிராம், பர்சா

புள்ளிவிவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads