பர்சா மாவட்டம்
நேபாளத்தின் மாதேஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பர்சா மாவட்டம் (Parsa District) (நேபாளி: पर्सा जिल्लाⓘ, தெற்காசியாவில் நேபாளத்தின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 2-இல் அமைந்துள்ளது. நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வீரகஞ்ச் நகரம் ஆகும்.


நாராயணி மண்டலத்தின் தராய் சமவெளியில் அமைந்த பர்சா மாவட்டத்தின் பரப்பளவு 1,353 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 6,01,017 ஆகும். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி (44%), நேபாள மொழி (45%), உருது மொழி (1%) மற்றும் பிற மொழிகள் (1%) பேசப்படுகிறது.
Remove ads
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,300 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம் மற்றும் மேல் வெப்ப மண்டலம் என இரண்டு நிலைகளில் காணப்படுகிறது. [1]
கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்

பர்சா மாவட்டத்தில் எண்பத்தி மூன்று கிராம வளர்ச்சி மன்றங்களும், பீர்கஞ்ச் எனும் நகராட்சியும் உள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads