பர்தூர் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பர்தூர் மாகாணம் ( துருக்கியம்: Burdur ili) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இதன் எல்லையாக தெற்கே முக்லா மற்றும் அந்தால்யா, மேற்கில் டெனிஸ்லி, வடக்கே அஃபியோன் மற்றும் கிழக்கில் இஸ்பார்டா ஆகிய மாகாணங்கள் உள்ளன. மாகாணத்தின் பரப்பளவு 6,887 கி.மீ. 2 ஆகும். மக்கள் தொகையானது 258,868 ஆகும். மாகாணத் தலைநகராக பர்தூர் நகரம் உள்ளது.
இந்த மாகாணமானது துருக்கியின் ஏரிகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. மாகாணத்தில் பல்வேறு அளவிலான பல ஏரிகள் உள்ளன. அவற்றில் மிகப் பெரியது, பர்தூர் ஏரி ஆகும். இந்த ஏரியின் பெயரைக் கொண்டே மாகாணத்தின் பெயர் அமைந்துள்ளது. சால்டா ஏரி மாகாணத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும், இது உலகின் தூய்மையான ஏரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
Remove ads
மாவட்டங்கள்
பர்தூர் மாகாணம் 11 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து சுட்டபட்டுள்ளது):
- அலாசுன்
- அல்தன்யாயிலா
- புகாக்
- பர்தூர்
- கேவ்டியர்
- செல்டிகட்சி
- கோலிசார்
- கரமன்லே
- கெமர்
- டெஃபென்னி
- யெசிலோவா
காட்சியகம்
- சாகலாசோஸின் பண்டைய நகரம்
- ஹசிலர் கற்கால தொல்லியல் தளத்திலிருந்து பெறப்பட்ட கலைப்பொருட்கள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads