டெனிஸ்லி மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டெனிஸ்லி மாகாணம் (Denizli Province, துருக்கியம்: Denizli ili ) என்பது மேற்கு அனத்தோலியாவில் உள்ள துருக்கி மாகாணமாகும், இது ஏஜியன் கடற்கரைக்கு மேலே உயர்ந்த நிலத்தில் உள்ளது. இதன் அண்டை மாகாணங்களாக வடக்கே உசாக், பர்தூர், இஸ்பார்டா, கிழக்கில் அஃபியோன், அய்டன், மேற்கில் மனிசா மற்றும் தெற்கே முலா ஆகியவை உள்ளன. இது 28 ° 30 'மற்றும் 29 ° 30' E மற்றும் 37 ° 12 'மற்றும் 38 ° 12' N ஆகிய ஆயங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த மாகாணமானது 11,868 கி.மீ. 2, பரப்பளவை கொண்டது. மேலும் இதன் மக்கள் தொகையானது 931,823 ஆகும். 1990 ல் மக்கள் தொகையானது 750,882 ஆக இருந்தது. மாகாண தலைநகரமாக டெனிஸ்லி நகரம் உள்ளது.
Remove ads
நிலவியல்

மாகணத்தின் ஏறக்குறைய 28-30% நிலம் சமவெளி, 25% உயரமான பீடபூமி மற்றும் மேட்டுச் சமவெளி, 47% மலைப்பகுதி ஆகும். 2571 மீட்டர் உயரம் கொண்ட ஹொனாஸ் மலையே மாகாணத்தில் மிக உயர்ந்தத பகுதியாகும், உண்மையில் மேற்கு அனத்தோலியா ஆகும். மென்டெஸ் மலைத்தொடரில் உள்ள பாபடாக் 2308 மீட்டர் உயரம் கொண்டது. டெனிஸ்லியில் உள்ள மிகப்பெரிய ஏரி அகாகல் ஆகும். இது ஒரு உப்பளஏரி ஆகும். இந்த ஏரியியல் இருந்து காரத்தன்மைவாய்ந்த உப்புக்கள் (அதாவது, சோடியம் சல்பேட் ) பிரித்தெடுக்கப்படுகின்றன. கிரேட் மென்டெரஸ் ஆற்று மூலமான, சாராய்கிக்கு மேற்கே ஒரு வெந்நீரூற்று உள்ளது, இதில் பைகார்பனேட்டுகள் மற்றும் சல்பேட்டுகள் உள்ளன. கோசால்டேரில் மற்றொரு சூடான வெந்நீரூற்று உள்ளது, இது 200˚C வெப்ப நிலையை அடைகிறது.
1965 ஆம் ஆண்டில் துளையிடும் வேலையின் போது ஒரு புவிவெப்ப நீராவியின் மூலமானது இப்பகுதியில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது புவிவெப்ப நீராவியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு மின் நிலையம் இங்கு உள்ளது. புவிவெப்ப ஆற்றல் மூலத்தில் 11% மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது, அதில் 89%, கிரேட் மென்டெரஸில் பாய்கிறது, இது 150˚C மூலத்தில் உள்ளது (இது 35,000 முதல் 40,000 டன் எரிபொருள் எண்ணெய்க்கு சமமான ஆற்றலைக் கொண்டுள்ளது).
Remove ads
காலநிலை
இந்த மாகாணத்தில் பொதுவாக ஏஜியன் பகுதியின் லேசான காலநிலை உள்ளது. இருப்பினும், இது உயரமான பகுதியில் கடுமையானதாக உள்ளது. கோடைக்காலத்தில் வெப்பநிலையானது 55 °C ஆக உயரக்கூடியதாகவும், குளிர்காலத்தில் -5 °C ஆக குறையைக்கூடியதாகவும் இருக்கும். மழையுடன் கூடிய நாட்களானது சுமார் 80 நாட்கள் இருக்கும். குறிப்பாக இது குளிர்காலத்தில் பொழியும்.
வரலாறு
பழமைத்தன்மை

மாகாணம் முழுவதும் தொல்பழங்கால கலாச்சாரங்களின் தடயங்கள் உள்ளன, இதில் இட்டைட்டுக்கு முந்தைய கலாச்சாரங்கள் மற்றும் இட்டைட்டு பேரரசு குறித்த சான்றுகள் உள்ளன. இட்டைட்டுகளைத் தொடர்ந்து ஃபிரைஜியர்கள், லிடியர்கள் மற்றும் பாரசீர்கர்கள், பின்னர் பண்டைய கிரேக்கர்கள் மற்றும் பேரரசர் அலெக்சாந்தர் ஆகியோரால் நிறுவப்பட்ட நகரங்கள் போன்றவற்றின் தடயங்கள் உள்ளன. முதல் மெய்யான குடியேற்றமானது லைகஸில் உள்ள லாவோடிசியா நகரமாகும். இது இரண்டாம் அந்தியோகஸ் மன்னரால் அவரது மனைவி லாவோடிஸுக்காக நிறுவப்பட்டது. லாவோடிசியா டெனிஸ்லி நகருக்கு வடக்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
டெனிஸ்லி சேவல்
டெனிஸ்லி துருக்கியில் புகழ்பெற்ற இன கொண்ட சேவல் ஆகும். இது அதன் தோற்றத்திற்கும் வண்ணத்திற்கும் புகழ்பெற்றது. அதன் நீடித்த மற்றும் இனிய கூவலுக்காகவும் பெயர்பெற்றது. இதன் இனத்தை பாதுகாக்க அரசாலும் மற்றும் உள்ளூர் விவசாயிகளாலும் பெரும் முயற்சி எடுக்கப்படுகிறது. தோற்றத்தில் டெனிஸ்லி சேவல் கருப்பு கண்கள், அடர் சாம்பல் கால்கள், நீண்ட கழுத்து மற்றும் சிவப்பு கொண்டை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எடை 3-3.5 கிலோ எடையுடையது. மேலும் இது ஒரு தனித்துவமான ஒலியை எழுப்பக்கூடியதாக உள்ளது.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads