முலா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முலா மாகாணம் (Muğla Province, துருக்கியம்: Muğla ili , pronounced ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கு பகுதியியல் ஏஜியன் கடலை ஒட்டி உள்ளது. இதன் தலைநகரான முலா கடற்கரையில் இருந்து சுமார் 20 km (12 mi) உள் பகுதியில் உள்ளது. துருக்கியின் மிகப் பெரிய விடுமுறை சுற்றுலா தலங்கலான போட்ரம், ஆல்டெனிஸ், மர்மாரிஸ் மற்றும் ஃபெதியே போன்றவை முலாவில் கடற்கரையில் உள்ளன.
Remove ads
சொற்பிறப்பு
மூலா நகரின் பெயரின் தோற்றம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. பல்வேறு சான்றுகள் நகரத்தை மொகோலா, மொபெல்லா அல்லது மொபோலியா என்று குறிப்பிடுகின்றன.
நிலவியல்
1,100 km (680 mi) நீளம் கொண்ட, முலா மாகாணக் கடற்கரைப் பகுதியானது துருக்கி மாகாணங்களில் மிக நீளமான கடற்கயைப் பகுதியைக் கொண்டது. மேலும் பல நாடுகளின் கடற்கரைகளை விட நீண்டது (எந்த சிறிய தீவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்). முக்கியமானது டட்டா தீபகற்பம் . கடல் போலவே, முலா மாகாணத்தில் இரண்டு பெரிய ஏரிகள் உள்ளன. ஒன்று மிலாஸ் மாவட்டத்தில் உள்ள பாஃபா ஏரி மற்றொன்று கெய்செஸ் ஏரி ஆகும். இதன் நிலப்பரப்பானது மலைகளால் சூழப்பட்ட பானை வடிவ சிறிய சமவெளிகளைக் கொண்டுள்ளது, இது புதுவெழு கால புவியியில் இறக்கத்தால் உருவானது. முலா நகரத்தின் சமவெளியில், யெசிலியர்ட், உலா, கெலாஸ், யெர்கெசிக், அக்காயா, ஆம்கே மற்றும் யெனிஸ் ஆகியவை அடங்கும். அண்மையில் நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படும் வரை, இந்த சமவெளிகளிலிருந்து கடற்கரை அல்லது உள்நாட்டுக்கு சென்று வருவது என்பது மிகவும் கடினமானதாக இருந்தது, இதனால் ஒவ்வொரு வட்டாரமும் தனியான ஒரு தனித்த கலாச்சாரமாகவே இருந்தது. வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள, செல்றுவர மூன்று கடினமான கணவாய்கள் வழியாகவே செல்ல வேண்டி இருந்தது. அவை வடமேற்கில் மிலாஸ், வடக்கே மெண்டெரஸ் சமவெளிக்கு செல்ல கோக்பெல் அல்லது வடகிழக்கு தவாஸ் ஆகும்.
முலாவின் பொருளாதாரமானது முக்கியமாக சுற்றுலா (கடற்கரையில்) மற்றும் வேளாண்மை, வனவியல் மற்றும் பளிங்கு குவாரிகள் போன்றவற்றை நம்பியுள்ளது.



முலாவில் வேளாண்மையானது வளம் மிகுந்தது மற்றும் மாறுபட்டதாக உள்ளது; துருக்கியின் மிகப்பெரிய தேன் உற்பத்தி பகுதிகளில் இந்த மாகாணம் ஒன்றாகும். குறிப்பாக பைன்-காடுகள் தேன் மற்றும் ஆரஞ்சுவகை பழங்களானது ஓர்டாக்கா, ஃபெதியே, தலமன் மற்றும் டால்யன் ஆகியபகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.
துருக்கியில் பளிங்குத் தொழிலில் அளவு, வகை மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் அஃபியோன்கராஹிசருக்குப் அடுத்து இரண்டாவது மையமாக இந்த மாகாணம் விளங்குகிறது. மற்ற கனிம அகழ்வுகளில் யடகானில் உள்ள நிலக்கரி சுரங்கமும், ஃபெத்தியில் உள்ள குரோமிய சுரங்கமும் அடங்கும். மாகாணத்தின் பிற தொழிலகங்களில் தலமனில் உள்ள சேகா காகித ஆலை மற்றும் யடகான், யெனிகே மற்றும் கெமர்கேயில் உள்ள மின் நிலையங்கள் போன்றவை ஆகும். இருப்பினும் முலா எந்த வகையிலும் தொழில்மயமாக்கப்பட்ட மாகாணம் அல்ல.
போக்குவரத்து
முலா மாகாணத்தின் போக்குவரத்து குறித்த அம்சங்கள் பின்வருமாறு:
- தலமான் மற்றும் மிலாஸ்-போட்ரமில் இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. அவற்றில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன மற்றும் சுற்றுலாத் துறைக்கு வசதியாக உள்ளன.
- போட்ரம், மர்மாரிஸ், ஃபெதியே மற்றும் கோலாக் ஆகிய இடங்களில் படகு துறைகள் உள்ளன.
- இசுமீர், ஆந்தாலியா, அங்காரா, இசுதான்புல் மற்றும் துருக்கியின் பிற முக்கிய நகரங்களுக்கு முலாவிலிருந்து நேரடியாகவும், கடலோர ரிசார்ட்டுகளிலிருந்தும் பல தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொல்பொருளியல்
நீண்ட வரலாற்றைக் கொண்ட மாகாணப் பகுதியான இது பண்டைய இடிபாடுகளால் நிறைந்துள்ளது, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான லெட்டூன் உட்பட 100 க்கும் மேற்பட்ட அகழ்வாராய்ச்சி தளங்கள், ஃபெத்தியேவுக்கு அருகில் உள்ளன.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads