பவிகொண்டா

From Wikipedia, the free encyclopedia

பவிகொண்டாmap
Remove ads

பவிகொண்டா பௌத்த வளாகம் (Bavikonda Buddhist Complex) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள மலையில் உள்ளது. தெலுங்கு மொழியில் பவிகொண்டா என்பதற்கு கிணறுகளின் மலை எனப் பொருளாகும். இங்குள்ள மலையில் மழை நீர் சேமிக்க கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் பவிகொண்டா, நாடு ...
Thumb
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்

பவிகொண்ட பௌத்த விகாரை கிமு மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். பவிகொண்டா பௌத்த தொல்லியல் களத்தை, ஆந்திரப் பிரதேச அரசு அகழாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்கள்:

  • கலசத்தில் சேகரிகப்பட்ட எலும்புத்துண்டுகள் (புத்தரின் எலும்புத் துண்டுகள் எனக் கருதப்படுகிறது.),
  • கல்வெட்டுக்கள்,
  • மட்பாண்டங்கள்,
  • பேழைகள்,
  • ஓடுகள்,
  • செங்கற்கள்,
  • நாணயங்கள் முதலியன.[1]

பவிகொண்டா அருகில் பிற பௌத்த தொல்லியல் களங்களான தொட்டலகொண்டா மற்றும் பவுரல்லகொண்டா உள்ளது.

Remove ads

பவிகொண்டா பௌத்த வளாகத்தின் காட்சிகள்

இதனையும் காணக

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads