கண்டகி பிரதேசம்

நேபாள மாநிலம் From Wikipedia, the free encyclopedia

கண்டகி பிரதேசம்map
Remove ads

கண்டகி பிரதேசம் (Kandaki Pradesh), 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, நேபாள நாட்டை, நிர்வாக வசதிக்காக ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. [1] இந்த ஏழு மாநிலங்களுக்குத் தற்போது ஒன்று முதல் ஏழு வரை எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநில எண் 4 என பெயரிடப்பட்டிருந்த இம்மாநிலத்திற்கு தற்போது '[கண்டகி பிரதேசம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் கண்டகி மாநிலம் गण्डकी प्रदेशமாநில எண் 4, நாடு ...
Thumb
நேபாளத்தின் 7 மாநிலங்கள்
Thumb
கண்டகி மாநிலத்தின் (மாநில எண் 4) பத்து மாவட்டங்கள்

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்கள் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும் இம்மாவட்டத்தின் பரப்பளவு 21,504 சதுர கிலோ மீட்டராகும். இதன் மக்கள் தொகை 2,413,907 ஆக உள்ளது.[2]

இம்மாநிலத்தின் தலைநகரம் பொக்காரா ஆகும்.

Remove ads

அமைவிடம்

மத்தியவடக்கு நேபாளத்தில் அமைந்த இம்மாநிலத்தின் வடக்கே திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் நேபாள மாநில எண் 5, கிழக்கில் நேபாள மாநில எண் 3, மேற்கில் நேபாள மாநில எண் 6 எல்லைகளாக அமைந்துள்ளது.

மக்கள்தொகையியல்

Thumb

கண்டகி பிரதேச இனக்குழுக்கள்

  பகுன் பிராமணர்கள் (21.5%)
  செட்டிரி மக்கள் (13.4%)
  குரூங் மக்கள் (8.4%)
  கமி மக்கள் (8.7%)
  சர்கி மக்கள் (4.1%)
  தமாலி மக்கள் (3.9%)
  தமாங் மக்கள் (2.1%)



Thumb

கண்டகி பிரதேசத்தில் சமயங்கள்

  பிறர் (0.60%)

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 21,504 சகிமீ பரப்பளவு கொண்ட கண்டகி பிரதேச மக்கள்தொகை 2,403,016 ஆகும். இது நேபாள மக்கள்தொகையில் 9.06% ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 9,48,028 ஆகவும்; பெண்கள் 1,144,124 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தியானது 1 சகிமீ பரப்பில் 110 வீதம் உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு, 89 ஆண்கள் வீதம் உள்ளனர். நகர்புற மக்கள்தொகை 60.5%; கிராமப்புற மக்கள்தொகை 39.5% ஆகவுள்ளது. [3]

Remove ads

மாநில எண் 4-இன் மாவட்டங்கள்

1. கோர்க்கா மாவட்டம்
2. லம்ஜுங் மாவட்டம்
2. மியாக்தி மாவட்டம்
4. காஸ்கி மாவட்டம்
5. மனாங் மாவட்டம்
6. முஸ்தாங் மாவட்டம்
7. பர்பத் மாவட்டம்
8. சியாங்ஜா மாவட்டம்
09. பாகலுங் மாவட்டம்
10. தனஹு மாவட்டம்
11. நவல்பூர் மாவட்டம்

அரசியல்

இம்மாநில சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களில் 36 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 24 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும் நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.

அரசாங்கம்

2017 சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சியின் அங்கமான மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரிதிவி சுப்பா குரூங், இம்மாநில அரசின் முதலாவது முதலமைச்சராக 16 பிப்ரவரி 2018 அன்று பதவியேற்றார். [4]

2017 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மாநில எண் 4

மேலதிகத் தகவல்கள் அரசியல் கட்சி, நேரடித் தேர்தலில் ...
Remove ads

சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads