பாச்சோக்

மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம், நகரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாச்சோக் (மலாய் மொழி: Jajahan Bachok; ஆங்கிலம்: Bachok District சீனம்: 万捷县) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; பாச்சோக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். அதே வேளையில் மாவட்டத்தின் பெயரும் பாச்சோக் ஆகும்.

விரைவான உண்மைகள் பாச்சோக், நாடு ...

தீபகற்ப மலேசியாவில் கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் ஒரு மாவட்டத்தின் நிர்வாக அமைப்பை (administrative division); சாச்சாகான் (Jajahan) என்று அழைக்கிறார்கள். இது ஓர் இரண்டாம் நிலை நிர்வாகப் பிரிவு ஆகும்.

Remove ads

பொது

கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் பாச்சோக் நகரம் அமைந்துள்ளது. மலாய் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சீனர் மற்றும் சயாமியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

இந்த பாச்சோக் நகரமும்; கிளாந்தான் மாநிலமும் தாய்லாந்து நாட்டுக்கு மிக அருகில் இருப்பதால் அந்த நாட்டின் மொழி, பண்பாட்டுத் தாக்கங்களும் அதிகமாக உள்ளன.

வரலாறு

தாய்லாந்து நாட்டை முன்பு சயாம் நாடு (Siam) என்று அழைத்தார்கள். 1939 சூன் 23-ஆம் தேதி சயாம் எனும் பெயர் தாய்லாந்து என மாற்றப் பட்டது.[1]

சயாம் என்பது ஒரு சமசுகிருதச் சொல். இந்தச் சொல்லை 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் முதலில் பயன்படுத்தினார்கள். 1939-ஆம் ஆண்டு வரை அந்தச் சொல் ஒரு புவியியல் சொல்லாக இருந்தது.[1]

பொது

பாச்சோக் நகரம்; பாச்சோக் மாவட்டத்தின் நிர்வாகம், வணிகம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் மையமாகும். பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்தது. குறிப்பிடத்தக்க அளவிற்கு மீன்பிடித் தொழிலும் உள்ளது.

பாச்சோக் நகரம் அல்லது பண்டார் பச்சோக் (Bandar Bachok) அண்மையில் இசுலாமிய சுற்றுலா நகரமாக (Islamic Tourism Town) அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads