பாடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரு பாடம் ( lesson) அல்லது வகுப்பு (class) என்பது கட்டமைக்கப்பட்ட காலகட்டத்தில் நிகழும் கற்றல் ஆகும்.[1] ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர் அல்லது பயிற்றுவிப்பாளரால் கற்பிக்கப்படுவதை உள்ளடக்கியதாகும்.பாடம் என்பது பாடநூலின் ஒரு பிரிவாக இருக்கலாம் (அச்சுப் பக்கத்தைத் தவிர, பல்லூடகமும் இதில் அடங்கும்) அல்லது, அடிக்கடி, ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் பற்றி கற்பவர்களுக்குக் கற்பிக்கப்படும் அல்லது ஒரு குறிப்பிட்ட செயலை எப்படிச் செய்வது என்று கற்பிக்கப்படும் ஒரு குறுகிய கால செயல்பாடு ஆகும். பாடங்கள் பொதுவாக வகுப்பறையில் கற்பிக்கப்படுகின்றன, சில சமயங்களில் சமூகச் சூழலிலும் நடைபெறலாம்.

பாடங்கள் பொழுதுபோக்கிற்காகவும் நடைபெறலாம். கல்வி என்ற சொல் மகிழ்கலையுடன் இணைந்தால், மகிழ்கலைக்கல்வி என்ற சொல் உருவாக்கப்பட்டது.
Remove ads
பாடங்களின் வகைகள்
ஒரே அறை அல்லது இடத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் உரையாடுவதற்கான வடிவம். கூடுதலாக இதில் சைகைகள் மற்றும் கருவிகள் இருக்கலாம். பாடமானது, விரிவுரை, விவாதம் , விளக்கக்காட்சி அல்லது இவற்றின் கலவையாக இருக்கலாம்.
சில பாடங்கள் மாணவர்களின் வேலையை உள்ளடக்கியிருக்கலாம். பயிற்றுவிப்பாளர் அல்லது ஆசிரியர் இல்லாதபோது, படிப்பதும் எழுதுவதும் அல்லது எதையாவது உருவாக்குவது போன்ற செயல்கள் இதில் அடங்கும். இது போன்ற சமயங்களில் மாணவர் சுயாதீனமாக வேலை செய்யலாம் அல்லது மற்றவர்களுடன் இணைந்து செயல்படலாம்.
சமீபத்திய தொழில்நுட்பங்கள் பாடத்தை கற்பிப்பதற்கான வழிகளை விரிவுபடுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக: திரைப்படத் துண்டுகள், முன் பதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் நிகழ்பட நாடாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலையொலிகள் ஆகியவைகளாகும். ஒரே இடத்தில் இருந்து கல்வி கற்க இயலாத சூழலில் நிகழ்படப் பாடம், காணொளிக் கரத்தரங்கு அல்லது மெய் நிகர் கற்றல் போன்ற தொலைதூரக் கல்வி நுட்பங்கள் மூலம் பாடங்கள் நடைபெறலாம். இந்த கருவிகள் பாடங்களை வழங்க புதிய ஒத்திசைவான, ஒத்திசைவற்ற மற்றும் கலப்பு வழிமுறைகளை வழங்குகின்றன.
Remove ads
சொற்பிறப்பியல்
பாடம் என்ற வார்த்தை இலத்தீன் சொல்லான "லெக்டியோ" என்பதிலிருந்து உருவானது. இதற்கு வாசிக்கும் செயல் என்பது பொருளாகும். மத சேவை வழங்கும் சமயத்தில் விவிலிய வாசிப்பின் போது பாடம் எனும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.[2]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads