பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Padang Rengas Railway Station மலாய்: Stesen Keretapi Padang Rengas); சீனம்: 巴东仁加斯火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டம், பாடாங் ரெங்காஸ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாடாங் ரெங்காஸ் நகரத்திற்கும்; மற்றும் கோலாகங்சார் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களுக்கும் சேவை செய்கிறது.[1][2]
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (Ipoh-Padang Besar Electrification and Double-Tracking Project) ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டில், தற்போதைய பாடாங் ரெங்காஸ் நிலையம் பாடாங் ரெங்காஸ் நகரத்தில் கட்டப்பட்டது.[3]
Remove ads
பொது
பாடாங் ரெங்காஸ் நிலையம் மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் இல் உள்ளது. பாடாங் ரெங்காஸ் நிலையம்; கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் சேவைகள் இரண்டிற்கும் ஒரு நிறுத்தமாகும்.
இந்த கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே உள்ளன. கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. [4][5]
புக்கிட் மெர்தாஜாம்-பாடாங் ரெங்காஸ் நிலையங்களை இணைக்கும் 1 பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (KTM Komuter Padang Rengas Line) 10 ஜூலை 2015 அன்று திறக்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads