பாந்தா
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாந்தா (Banda), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த பாந்தா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் யமுனை ஆற்றின் துணை ஆறான கென் ஆறு பாய்கிறது. இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தெற்கே 198 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 29 வார்டுகளும், 29,162 வீடுகளும் கொண்ட பாந்தா நகரத்தின் மக்கள் தொகை 1,60,473 ஆகும். அதில் ஆண்கள் 85,370 மற்றும் பெண்கள் 75,103 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 82.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 19,198 மற்றும் 22 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.73%, இசுலாமியர் 21.26%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.42, கிறித்தவர்கள் 0.24% மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.[3]
Remove ads
போக்குவரத்து
தொடருந்துகள்

பாந்தா இரயில் நிலையம்[4] கொல்கத்தா, தில்லி, மும்பை, லக்னோ, போபால், குவாலியர், ஜபல்பூர், வாரணாசி, ஆக்ரா போன்ற நகரங்களை இணைக்கிறது.
கல்வி
- பாந்தா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
- அரசு மருத்துவக் கல்லூரி, பாந்தா
- காளிசரண் நிகாம் தொழில்நுட்ப நிறுவனம், பாந்தா[5]
- இராஜ்கியா பொறியியல் கல்லூரி, பாந்தா
தட்ப வெப்பம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads