பாபுராசு (நடிகர்)
இந்தியத் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாபுராசு யாக்கப் (Baburaj Jacob) பாபுராசு என்றும் அழைக்கப்படும் இவர்இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளருமாவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் தோன்றியுள்ளார். இவர் தனது திரை வாழ்க்கையில் பல முரண்பாடான பாத்திரங்களில் நடித்தார். "சால்ட் என் பெப்பர் (2011) படத்துக்குப் பிறகு நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.[2] இவர் இரண்டு மலையாள படங்களையும் இயக்கியுள்ளார். மேலும், ஏராளமான படங்களை எழுதியுள்ளார்.
Remove ads
சொந்த வாழ்க்கை
ஒரு வழக்கறிஞரான இவர், ஒலீக்கல், டி. ஐ. கர்மாலி தொட்டுங்கல் ஆகியோருக்கு பிறந்தார். இவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் திருமணத்திலிருந்து அபய், அக்சய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[3] இவரது இரண்டாவது திருமணம் தென்னிந்திய நடிகை வாணி விசுவநாத்துடன் இருந்தது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள், ஆர்ச்சா என்ற மகளும், ஆதிரி என்ற மகனும் உள்ளனர். இவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார்கள். 14 பிப்ரவரி 2017 அன்று, இடுக்கியில் ஒரு விடுதியில் இருக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனது பக்கத்துவீட்டில் வசிக்கும் ஒருவரால் குத்தப்பட்டார்.[4]
Remove ads
திரை வாழ்க்கை
இவர், துணைக் கலைஞராக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மலையாளத்தில் இவரது அறிமுகமானது கொச்சி ஹனீஃபா இயக்கிய பீஷ்மாச்சார்யார் (1994) என்ற படத்தில் இருந்தது. அதில் இவர் ஒரு மோசமான வில்லனாக நடித்தார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற "காட்பாதர்" படத்தின் மறு ஆக்கமான உல்ச்சுல் என்ற இந்தித் திரைப்படத்திலும் வில்லனாக நடித்தார். இவர் நான்கு மலையாளத் திரைப்படங்களையும் ஒரு தமிழ்த் திரைப்படத்தையும் தயாரித்தார்.[5]
2009 ஆம் ஆண்டில், மலையாளத் திரைப்படமான பிளாக் டாலியாவில் இயக்குநராக அறிமுகமானார். இவரும் நடிகர் சுரேஷ் கோபியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இவரும் பிருத்விராஜ் சுகுமாரனும் கதாநாயகனாக நடித்த மனுஷ்யமிருகம் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவரது மனைவி இத்திரைப்படத்தை தயாரித்தார்.
2011ஆம் ஆண்டில், ஆஷிக் அபு இயக்கிய சால்ட் என் பெப்பரில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இவரது நடிப்பு மற்றவர்களுடன் நன்கு குறிப்பிடப்பட்டது. அதற்காக மலையாளத்தில் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். இந்த நகைச்சுவை பாத்திரத்தின் மூலம், மலையாளத் திரையுலகில் மிகவும் பரபரப்பான நடிகர்களில் ஒருவரானார். ஆர்டினரி, மாயமோகினி போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இது தவிர, நாட்டி புரொபசர், டி.ஒய்.எஸ்.பி சங்குன்னி அங்கிள் போன்ற படங்களில் முன்னணி நடிகராக இருந்தார்.
Remove ads
கொலை முயற்சி
பிப்ரவரி 14, 2017 புதன்கிழமை, இடுக்கி மாவட்டத்தின் அடிமாலியிலுள்ள தனது விடுதியில் உள்ளூர்வாசிகளுடன் ஏற்பட்ட தகராறில் குத்தப்பட்டார். இவர், உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, எர்ணாகுளம் ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads