வாணி விசுவநாத்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாணி விஸ்வநாத் (Vani Viswanath, பிறப்பு 13 மே 1971) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.[1] இவர் டி. வி. சந்திரன் இயக்கிய சூசன்னா படத்தில் நடித்ததற்காக 2000 ஆம் ஆண்டில் இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார் .[2] இவர் மோலிவுட்டின் "அதிரடி ராணி" என்று அழைக்கப்பட்டார்.[3] 2017 ல் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.[4]

விரைவான உண்மைகள் வாணி விசுவநாத், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

1971 ஆம் ஆண்டில் கேரளத்தின் திருச்சூரில் உள்ள ஒல்லூரில் உள்ள மலையாளி பெற்றோர்களான தாத்துவீட்டில் சோதிடரான விஸ்வநாதன் மற்றும் ஜிரோஜா ஆகியோரின் ஐந்து குழந்தைகளில் நான்கானவராக வாணி பிறந்தார். ஒல்லூரில் உள்ள செயின்ட் ரபேல் கான்வென்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் சென்னையிலும் தனது பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். இவருக்கு 13 வயதாக இருந்தபோது, இவர் ஒரு நடிகையாவார், மேலும் இவர் அரசியலில் நுழைவார் என்று இவரது தந்தை சோதிடம் மூலம் கணித்தார்.[5]

Remove ads

தொழில்

மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் இவர் முக்கியமாக நடித்துள்ளார். இவர் தி கிங் படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார். கன்னடம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களிலும் தோன்றினார். இவர் தென்னிந்தியாவில் இவரது காலத்தின் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார். தெலுங்கு திரையுலக உச்ச நட்சத்திரம், சிரஞ்சீவியுடன் அவரது டோலிவுட் படமான கரான மொகுடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வாணி தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றவர். படங்களில் பல ஆண்களுடன் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். உச்ச சந்சத்திரமான மிதுன் சக்கரவர்த்தியுடன் ஜங் மற்றும் பீஷ்மா என்னும் இரண்டு இந்தி படங்களிலும் வாணி நடித்துள்ளார்.

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

பாபுராஜுடன் பல படங்களில் இணைந்து நடித்த இவர்களிருவரும் காதலித்தனர். இந்த இணை 2002 இல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ஆர்ச்சா (2002 இல் பிறந்தார்) ஆத்ரி (2008 இல் பிறந்தார்) என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர்.[6]

விருதுகள்

கேரள மாநில திரைப்பட விருதுகள்
  • 2000 - சூசன்னா படத்தில் நடித்தற்காக இரண்டாவது சிறந்த நடிகை

திரைப்படவியல்

தமிழ்

  1. மண்ணுக்குள் வைரம் (1986) (அறிமுக படம்) சின்னாதயியாக
  2. நல்லவன் (1988) ராதாவாக
  3. பூந்தோட்ட காவல்காரன் (1988)
  4. தாய் மேல் ஆணை (1988) விஜயாவாக
  5. இது எங்கள் நீதி (1988)
  6. சங்கு புஷ்பங்கள் (1989)
  7. மை இந்தியா (1997)
  8. ஜெயா (2002)
  9. இதயத்திருடன் (2005) சுதாராணியாக

தொலைக்காட்சி

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads