பாரூக் மரைக்காயர்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

பாரூக் மரைக்காயர்
Remove ads

பாரூக் மரைக்காயர் (எம். ஓ. ஆசன் பாரூக் மரைக்காயர், செப்டம்பர் 6, 1937 - சனவரி 26, 2012) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுவை சட்டப் பேரவைத் தலைவராக இருமுறையும்,புதுச்சேரி முதலமைச்சராக மும்முறையும், எதிர்க்கட்சி தலைவராக ஒருமுறையும் பணியாற்றியவர். தேசிய அரசியலில் மும்முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மாணவராக இருந்தபோது 1953-54 ஆண்டுகளில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரியின் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மும்பையில் உள்ள மத்திய ஹஜ் கமிட்டியில் உறுப்பினராக 1975 முதல் 2000 ஆண்டுவரை இருந்தார்.[1]. சவுதி அரேபியாவில் இந்திய அரசின் தூதராக 2004 முதல் பணிபுரிந்து வந்தார்.[2]. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுனராகவும் [3]. கேரள ஆளுனராகவும் இருந்தார்.[4]

விரைவான உண்மைகள் எம். ஓ. ஹாசன் பாரூக் மரைக்காயர், நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) - புதுச்சேரி ...

பாரூக் மரைக்காயர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றவர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads