திருநெல்வேலி மாநகராட்சி

இந்தியாவின் தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருநெல்வேலி மாநகராட்சி (Tirunelveli Municipal Corporation) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், தெற்குப் பகுதி மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தின், மாநகர் பகுதியாகும். இம்மாநகராட்சி 55 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. தமிழகத்தின் ஆறாவது பெரிய நகரமாகும். இது ஆரம்பிக்கப்பட்டது 1994ஆம் ஆண்டு. திருச்சிராப்பள்ளி, சேலம் ஆகியவை திருநெல்வேலி மாநகராட்சியின் வயதை ஒத்தவை. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 212 கோடி ரூபாய் ஆகும். பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். திருநெல்வேலி மாவட்டம்தான், பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். அழகு முத்து கோன் பூலித்தேவன், காயிதே மில்லத் இஸ்மாயில், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வெண்ணிக் காலாடி, வாஞ்சிநாதன் மற்றும் விடுதலைப் புரட்சியாளர்களான வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா மற்றும் பலரின் பிறப்பிடமாகும். டிவிஎஸ் குழுமம், சிம்சன், ஏசான், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தொழிலதிபர்களும் இம்மாவட்டத்தையே பிறப்பிடமாகக் கொண்டுள்ளனர். திருநெல்வேலி, 'அல்வா' தயாரிப்புக்குப் பிரசித்திப் பெற்ற இடமாகும். இதனால் இது, "அல்வா நகரம்" என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது.

விரைவான உண்மைகள் திருநெல்வேலி மாநகராட்சி, வகை ...
Remove ads

வரலாறு

திருநெல்வேலி நகராட்சியானது 1865ஆம் ஆண்டின் நகர மேம்பாட்டுச் சட்டத்தின்படி 1 நவம்பர் 1866-ல் உருவாக்கப்பட்டது.[1] ஆரம்பத்தில் திருநெல்வேலி நகரம் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு பகுதியை மட்டும் உள்ளடக்கியதாக இருந்தது. பாளையங்கோட்டை தனி நகராட்சியாக செயல்பட்டு வந்தது. இதனால் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை இன்றும் இரட்டை நகரங்களாக கருதப்படுகிறது.[1] 1994ல் திருச்சிராப்பள்ளி மற்றும் சேலத்துடன் திருநெல்வேலி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி என்பது திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை நகராட்சிகளை சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைத்து உருவாக்கப்பட்டது.[2]

திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாக வசதிக்காக 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

  • மேலப்பாளையம்
  • பாளையங்கோட்டை
  • பேட்டை
  • தச்சநல்லூர்
  • திருநெல்வேலி நகரம்
Remove ads

மாநகராட்சி

மேலதிகத் தகவல்கள் ஆணையர், நகரத்தந்தை ...

மாநகராட்சி தேர்தல், 2022

2022-ஆம் ஆண்டில் இம்மாநகராட்சியின் 55 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 50 வார்டுகளையும், அதிமுக 4 வார்டுகளையும், சுயேச்சைகள் 1 வார்டையும் கைப்பற்றினர்.[5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads