சா ஆலாம் வழித்தடம்

கிள்ளான் நகர்ப்புறங்களுக்குச் சேவை செய்யும் வழித்தடம் From Wikipedia, the free encyclopedia

சா ஆலாம் வழித்தடம்
Remove ads

சா ஆலாம் வழித்தடம் (ஆங்கிலம்: Shah Alam Line அல்லது LRT Shah Alam Line; அல்லது LRT Bandar Utama-Johan Setia Line; மலாய்: Laluan Shah Alam அல்லது Laluan LRT Bandar Utama–Johan Setia) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில், சா ஆலாம் மற்றும் கிள்ளான் நகர்ப்புறங்களுக்குச் சேவை செய்யும் ஒரு விரைவுத் தொடருந்து வழித்தடம் ஆகும். தற்போது இந்த வழித்தடம் கட்டுமானத்தில் உள்ளது.[6]

விரைவான உண்மைகள் சா ஆலாம் வழித்தடம் Shah Alam Line, கண்ணோட்டம் ...

இது மூன்றாவது இலகு விரைவு தொடருந்து வழித்தடமாகவும், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நான்காவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பாகவும் இருக்கும்.

Remove ads

பொது

பிரசரானா மலேசியாவின் ரேபிட் ரெயில் துணை நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடம் இயக்கப்படும். 24 ஏப்ரல் 2013-இல் இந்தத் திட்டம் பிரசரானா மலேசியா நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது.

இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.

25 நிலையங்கள்

இந்த வழித்தடத்தில் 25 நிலையங்கள் உள்ளன. 37.8 கிமீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில், பெரும்பாலும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. அத்துடன் ஒரே ஒரு நிலத்தடி நிலையம் மட்டுமே உள்ளது.

இந்த வழித்தடத்தில்,  KG09  பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையத்தில் எம்ஆர்டி காஜாங் வழித்தடம்;  KJ27  கிளன்மேரி எல்ஆர்டி நிலையத்தில் கிளானா ஜெயா வழித்தடம் எனும் இரண்டு பரிமாற்ற வழித்தடங்களின் சேவைகளும் உள்ளன.

Remove ads

வரலாறு

Thumb
சா ஆலாம் வழித்தட அமைவு

முன்னதாக, மொத்தம் 26 நிலையங்கள் கட்டப்பட்ட திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு நிலையத்திற்கும் இடையே இரண்டு கிலோமீட்டர் தூர இடைவெளி வரையறுக்கப்பட்டது.அவற்றுள் ஒரு நிலையம் நிலத்தடி நிலையமாக இருக்க வேண்டும்; மற்ற 25 நிலையங்கள் உயர்த்தப்பட்ட நிலையங்களாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.

2018 மலேசியப் பொதுத் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, புதிய பாக்காத்தான் அரப்பான் அரசாங்கம் இந்தத் திட்டத்தின் செலவைக் குறைக்க முடிவு செய்தது.

அதன் காரணமாக தொடக்கத் திட்டத்தில் ஆறு நிலையங்களின் கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

திட்டச் சீரமைப்பு

திட்டத்திற்கான அதிக செலவு; வழித்தடத்தின் நிலத்தடி பகுதியில் தேவையற்ற சுரங்கப்பாதைகள்; மற்றும் அப்பகுதியில் குறைவான பயணிகளின் எண்ணிக்கை; ஆகியவை செலவைக் குறைக்க முடிவு செய்த காரணங்கள் என குறிப்பிடப்பட்டது.

மேலும் சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

  • ஆறு பெட்டிகள் கொண்ட தொடருந்துகளை மூன்று பெட்டிகள் கொண்ட தொடருந்துகளாக மாற்றுவது
  • தொடருந்துகளை 42-இல் இருந்து 22-ஆகக் குறைப்பது
  • நிலையங்களின் அளவைக் குறைப்பது
  • விலையுயர்ந்த தொழில் நுட்பங்களைக் குறைப்பது
  • பிற செலவுகளைக் குறைப்பது

கட்டுமான நிறைவு காலம், 2020-இல் இருந்து 2024 வரை நீட்டிக்கப்பட்டது.[7][8]

Remove ads

கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்

காட்சியகம்

கட்டுமானத்தில் உள்ள நிலையங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads