பிரபாவதி (திரைப்படம்)

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

பிரபாவதி (திரைப்படம்)
Remove ads

பிரபாவதி (Prabhavathi) 1944 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் இந்துத் தொன்மவியல் திரைப்படம் ஆகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் லேனா செட்டியார் தயாரித்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், எஸ். பி. எல். தனலட்சுமி, டி. ஆர். ராஜகுமாரி [1]ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]

விரைவான உண்மைகள் பிரபாவதி, இயக்கம் ...
Remove ads

திரைக்கதை

இந்துக் கடவுளான கிருட்டிணன் (எம். எஸ். சரோஜா), அவரது மகன் பிரத்யும்னன் (சி. ஹொன்னப்ப பாகவதர்), முனிவர் நாரதர் (கே. மகாதேவ ஐயர்) மற்றும் நாரதரின் குறும்புச் செயல்கள், பிரத்யும்னன் ஒரு முனிவரால் சபிக்கப்பட்டு பெண்ணாக மாறியது, கிருட்டிணனின் ஈடுபாட்டினால் பிரத்யும்னன் சாபத்தில் இருந்து விடுபடுவது, பிரத்யும்னன் எப்படி அவரது காதலி மாயாவதியுடன் (டி. ஆர். ராஜகுமாரி) மீண்டும் இணைகிறார் என்பதே திரைக்கதை ஆகும்.[2][3]

Remove ads

நடிக, நடிகையர்

மேலதிகத் தகவல்கள் நடிகர், பாத்திரம் ...

இவர்களுடன் புளிமூட்டை ராமசாமி, திருவேங்கிடம், குப்புசாமி, சங்கரமூர்த்தி, செல்லமுத்து, கிருஷ்ணமூர்த்தி, சின்னச்சாமி, கோபால் ஆகியோர் அசுரர்களாக நடித்திருந்தனர்.[3]

மேலதிகத் தகவல்கள் நடிகை, பாத்திரம் ...

இவர்களுடன் நடனமாதர்களாக டி. ஏ. ஜெயலட்சுமி, கே. ஆர். ஜெயலட்சுமி, கே. எஸ். ஆதிலட்சுமி, கே. எஸ். ராஜம், எஸ். சரசுவதி, வி. எஸ். சிட்டி அம்மாள், ஆர். என். தனபாக்கியம் ஆகியோரும், துணை நடிகைகளாக டி. டி. கிருஷ்ணாபாய், டி. டி. கமலாபாய், பி. எஸ். சந்திரா, வி. லட்சுமிகாந்தம் ஆகியோரும் நடித்திருந்தனர்.[3]

Remove ads

தயாரிப்பு

பிரபாவதி டி. ஆர். ரகுநாத்தினால் இயக்கப்பட்டு எஸ். எம். லெட்சுமணன் "லேனா" செட்டியாரின் கிருஷ்னா பிக்சர்சின் தயாரிப்பில் வெளிவந்தது. கிருட்டிணன் என்ற ஆண் பாத்திரத்தில் டி. ரகுநாத்தின் மனைவி எம். எஸ். சரோஜா நடித்திருந்தார். கொன்னப்ப பாகவதர் பிரதியும்னன் என்ற முக்கிய பாத்திரத்திலும், டி. ஆர். ராஜகுமாரி பிரதியும்னனின் காதலி மாயாவதியாகவும் நடித்தனர். டி. ஆர். ராஜகுமாரியின் அத்தை எஸ். பி. எல். தனலட்சுமி பிரபாவதியாகவும், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் நகைச்சுவைக் காட்சிகளிலும் நடித்தனர்.[2][3]

வெளியீடும் வரவேற்பும்

பிரபாவதி முருகன் டாக்கீசினால் வெளியிடப்பட்டது.[4] இந்தத் திரைப்படம் வணிகரீதியாக வெற்றிபெறாவிடினும், "கவர்ச்சிப் பெண்ணான ராஜகுமாரியின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் ஒன்றாக இது நினைவுகூரப்படும்" என திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை கூறுகிறார்.[2]

பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads