பிரியாத வரம் வேண்டும் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரியாத வரம் வேண்டும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 17 சூன் 2019 முதல் 1 ஆகத்து 2020 வரை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான கனவுருப்புனைவு காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரில் விமல் வெங்கடேசன், பிரியங்கா, மதுமிதா போன்றவர்கள் நடித்திருந்தனர்.[2] இத்தொடர் கொரோனா தொற்றுநோய் காரணமாக 1 ஆகத்து 2020 அன்று 203 அத்தியாயங்களுடன் முடிவடைந்தது. [3]
Remove ads
கதைச்சுருக்கம்
முன் ஜென்மத்தில் காதலிக்கும் ரிஷி மற்றும் துர்கா. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துர்காவை ரிஷியின் குடும்பத்தினர் கொலை செய்கிறார். கதாநாயகனும் கொல்லப்படுகிறான். 300 வருடம் கழித்து மறுபடியும் சந்திக்கும் காதல் ஜோடிகள். இந்த ஜென்மத்திலும் இவர்களின் காதலுக்கு எதிராக இருக்கும் குடும்பம். தடைகளை தாண்டி முன் ஜென்மத்தில் கதாநாயகனை கொலை செய்தது யார்? இந்த ஜென்மத்தில் இவர்கள் எப்படி ஒன்று சேரப்போகின்றார்கள் என்பது தான் கதை.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- விமல் வெங்கடேசன் - ரிஷி
- மதுமிதா - துர்கா / அமராவதி
- பிரியங்கா - மது / மித்ரா சேனா
- மாமில்லா ஷைலஜா பிரியா - சித்ரா
துணை கதாபாத்திரம்
- அகிலா - அபர்ணா
- காவேரி - அபர்ணாவின் நாத்தனார்
- துரைமணி - அபர்ணாவின் கணவன்
- அந்திரேயா ஜேசுதாஸ் - ருத்ரைய்யா
நடிகர்களின் தேர்வு
இந்தத் தொடரின் நாயகியாக புதுமுக நடிகை மதுமிதா ஏழை பெண்ணாக துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரிஷி என்ற கதாபாத்திரத்தில் விமல் வெங்கடேசன் பணக்காரவீட்டு பையனாக நடித்திருந்தார். அ. இராமச்சந்திரன் என்பவர் இந்த தொடரை இயக்கியிருந்தார். இந்தத் தொடருக்காக 2 கோடி ரூபாயில் பிரமாண்டமான அரண்மனை வீடு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[4]
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்தத் தொடர் முதல் முதலில் 17 சூன் 2019 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி, பிப்ரவரி 24, 2020 முதல் மாலை 6 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு முடிவடைந்தது.
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads