பப்லு பிரித்திவிராஜ்

இந்திய திரைப்பட நடிகள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பப்லு பிரித்திவிராஜ் (Babloo Prithiveeraj பிறப்பு 18 சூலை 1966) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். மேலும் இவர் 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் பிரித்திவிராஜ், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

பிரித்திவிராஜ் முதன்முதலில் நான் வாழவைப்பேன் (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு முன்னர் 1980களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவந்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன் அவள் வருவாளா போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்தார். 2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும் அமானுசிய திகில் தொடரான மர்ம தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரு தொடர்களும் இவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தின. இதற்கிடையில் இவர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சவால் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கனார். பின்னர் இவர் ராதிகவின் தொலைக்காட்சித் தொடரான அரசியில் திருநங்கையாக நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சித் தொடர்களான ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார்.[1]

பிரித்திவிராஜுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் நடனத் திறமைக்கான போட்டி நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன்னின் இரண்டாவது பருவத்தில் போட்டியிட்டார். நிகழ்ச்சியின் போது, நடிகரும் அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.[2] 2010இல் இருந்து இவர் பெரும்பாலும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார். இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அதன் தாக்கத்தால் சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டி ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார்.[3]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

1994இல் பீனா என்பவரை பப்லு திருமணம் செய்தார். இவர்களுக்கு 1994இல் அகீத் என்ற மகன் பிறந்தார்.[4]

திரைப்படங்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
தொலைக்காட்சி
  • கோகுலத்தில் சீதை
  • அலைபாயுதே
  • அரசி
  • வாணி ராணி
  • சவால்
  • ரமணி விசஸ் ரமணி
  • மர்மதேசம்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads