பி. ஏ. முகமது ரியாஸ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பி. ஏ. முகமது ரியாஸ் (P. A. Mohammed Riyas) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். தற்போது கேரள அரசின் பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக பணியாற்றுகிறார்.[1] இந்தியப் பொதுவுடமைக் கட்சி கட்சியின் கேரள மாநில குழு உறுப்பினராக இருக்கும் இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் அகில இந்திய தலைவராகவும் இருந்தார்.[2][3][4][5]

விரைவான உண்மைகள் பி. ஏ. முகமது ரியாஸ்P. A. Mohammed Riyas, அமைச்சர், கேரள அரசு ...
Remove ads

இளமை வாழ்க்கை

முகமது ரியாஸ் கோழிக்கோட்டில் பிறந்தார்.[6] இவரது தந்தை பி. எம். அப்துல் காதர் ஒரு இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.[7] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவரது உறவினர் பி. கே. மொய்தீன்குட்டி சாஹிப் கேரள பிரதேச காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவராவார். அவர், சுதந்திர போராட்ட வீரராகவும், 1937 இல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[8]

ரியாஸ் தனது பள்ளிப்படிப்பை கோழிக்கோட்டில் உள்ள புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர், பரூக் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர் கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.[9]

Remove ads

சொந்த வாழ்க்கை

இவர் 2002 இல் மருத்துவர் சமீகா சைதலவி என்பவரை மணந்தார். பின்னர் 2015 இல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[10] 15 ஜூன் 2020, அன்று கேரள முதலமைச்சர் பிணறாயி விஜயனின் மகள் டி. வீணாவை மணந்தார்.[11]

தேர்தல் அரசியல்

2009 இந்தியப் பொதுத் தேர்தலின்போது, ரியாஸ் கோழிக்கோடு தொகுதியில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக இருந்தார்.[12][13] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் எம். கே. ராகவன் 838 வாக்குகள் வித்தியாசத்தில் ரியாஸை வென்றார். ராகவன் தனக்கு எதிராக அச்சு ஊடகங்களில் பிரச்சாரத்தை வெளியிட்டதாக குற்றம் சாட்டி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ரியாஸ் தேர்தல் முடிவை எதிர்த்தார்.[14][15] இந்த மனு 2010 மே 17 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.[16]

2021 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகமது ரியாஸ் 28,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அரசியல் கருத்துக்கள்

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 -ஐ ரியாஸ் விமர்சித்து எதிர்த்தார். [17][18][19][20] அச்சட்டத்திற்கு எதிர்ப்பை இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டமாக இவர் கருதுகிறார். 6 ஜனவரி 2020 அன்று, கோழிக்கோடு கடற்கரையில் 100,000 பேருடன் அச்சட்டத்திற்கு எதிரான பேரணிக்கும் தலைமை தாங்கினார்.[21]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads