பி. கே. வாரியர்
ஆயுர்வேத மருத்துவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. கே. வாரியர் (P. K. Warrier) என்று பிரபலமாக அறியப்பட்ட பன்னியம்பள்ளி கிருஷ்ணன்குட்டி வாரியர் (பிறப்பு 5 ஜூன் 1921-10 சூலை 2021) என்பவர் ஒரு இந்திய ஆயுர்வேத மருத்துவர் ஆவார். இவர் இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் மலப்புறம் மாவட்டம் கோட்டக்கல்லில் பிறந்தவர். [1] இவர் கோட்டக்கல் ஆர்யா வைத்ய சாலையின் தலைமை மருத்துவரும், நிர்வாக அறங்காவலரும் ஆவார். [2] இவர் ஆர்யா வைத்ய சாலையின் நிறுவனரான வைத்தியரத்னம் பி. எஸ். வாரியரின் இளைய மருமகன் ஆவார்.
Remove ads
விருதுகளும் கௌரவங்களும்
1999 ஆம் ஆண்டில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தால் இவருக்கு கெளரவ டி.லிட் பட்டம் வழங்கப்பட்டது. [3] பி. கே. வாரியருக்கு அப்போதைய மகாராட்டிரா ஆளுநர் பி. சி. அலெக்சாண்டர் 30 வது தன்வந்த்ரி விருதை வழங்கினார். [4] ஆயுர்வேதத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளை பாராட்டும்விதமாக இவருக்கு 1999 இல் பத்மசிறீ விருதும், [5] 2010 இல் [5] பத்ம பூசண் விருதையும் இந்திய அரசிடமிருந்து பெற்றார். [6] [7]
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads