புக்கிட்திங்கி மாநகரம்
மேற்குச் சுமாத்திராவிலுள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புக்கிட்திங்கி (ஆங்கிலம்: City of Bukittinggi; இந்தோனேசியம்: Kota Bukittinggi) என்பது இந்தோனேசியா மேற்கு சுமத்ராவின் மூன்றாவது பெரிய நகரமாகும். இது 124,000-க்கும் அதிகமான மக்கள் தொகை; மற்றும் 25.24 கி.மீ.² பரப்பளவு கொண்டது.[3]
இது மேற்கு சுமத்திராவின் தலைநகரான படாங்கில் இருந்து சாலை வழியாக 90 கி.மீ தொலைவில் உள்ள மினாங்கபாவு பெருநிலத்தில் உள்ளது. இதன் முழுப் பகுதியும் ஆகாம் குறுமாநிலத்தை (Agam Regency) நேரடியாக ஒட்டியுள்ளது. மேலும் இது 0 ° 18′20 ″ S 100 ° 22′9 ″ E ஆற்கூற்றில் அமைந்துள்ளது.
Remove ads
பொது
இது சிங்கலங் எரிமலை (செயலற்றது) மற்றும் மெராப்பி எரிமலை (இன்னும் செயலில் உள்ளது) ஆகிய எரிமலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மாநகரம் கடல் மட்டத்திலிருந்து 930 மீ உயரத்தில் உள்ளது. மேலும், இந்த நகரம் 16.1 ° முதல் 24.9 °C வரை வெப்பநிலையுடன் குளிர்ந்த காலநிலையைக் கொண்டுள்ளது.
புக்கிட்திங்கி முன்பு ஃபோர்ட் டி கோக் என்று அழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் "பரிஜ்ஸ் வான் சுமடேரா" என்றும் அழைக்கப்பட்டது. இந்தோனேசியா குடியரசின் (பி.டி.ஆர்.ஐ) அவசரகால அரசாங்கத்தின் போது இந்த நகரம் இந்தோனேசியாவின் தலைநகராக இருந்தது. இது பி.டி.ஆர்.ஐயின் தலைநகராக மாறுவதற்கு முன்பு, டச்சு ஈஸ்ட் இண்டீஸ் காலத்திலும் ஜப்பானிய காலனித்துவ காலத்திலும் இந்த நகரம் அரசாங்கத்தின் மையமாக இருந்தது.
மேற்கு சுமத்ராவின் முன்னணி சுற்றுலா நகரமாகவும் புக்கிட்திங்கி அறியப்படுகிறது. இது மலேசியா நெகிரி செம்பிலான், சிரம்பானுடன் இணைந்து இரட்டை நகரமாக உள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள ஜாம் கடாங், கடிகார கோபுரம் நகரத்தின் அடையாளமாகவும், நன்கு பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
Remove ads
பிரபலமானவர்களின் பிறப்பிடம்
இந்தோனேசியாவின் மூத்த அரசியல்வாதியும்; இந்தோனேசிய விடுதலைக்குப் போராடியவருமான முகமது அட்டா, இந்தோனேசிய அரசியல் தலைவரான ஆசாத் ஆகியோரின் பிறப்பிடமாக இந்த நகரம் விளங்குகிறது.
இந்த நகரின் தென்மேற்கில் அமிந்துள்ள கோத்தோ காடாங் (Koto Gadang) கிராமத்தில் பிறந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், மருத்துவர்கள், பொருளாதார வல்லுனர்கள், கலைஞர்கள் இந்தோனேசியாவிற்கு, பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களில், சுல்தான் ஜாகிர், அகஸ் சலீம், பகதெர் தோகான், ரோகானா குடாஸ், எமில் சலீம், டாக்டர். சியாகிர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
Remove ads
நிர்வாக மாவட்டங்கள்
புக்கிட்திங்கி மூன்று மாவட்டங்களாக ( கெகமதன் ) பிரிக்கப்பட்டுள்ளது, அவை மேலும் ஐந்து கிராமங்களாகவும் ( நாகரி ) 24 கேலுராஹானாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த மூன்று மாவட்டங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
- குகுக் பஞ்சாங்
- மாண்டியன்ஜின் கோட்டோ செலயன்
- அவுர் ப்ருகோ டிகோ பாலே
போக்குவரத்து
புக்கிட்திங்கி பாடாங்குடன் சாலை வழியில் இணைக்கப்பட்டுள்ளது. 1980 களின் முற்பகுதி வரை பதங் பஞ்சாங்கிலிருந்து ஒரு ரயில் சேவை இருந்தது, அது நகரத்திற்கு சேவை செய்தது. உள்-நகர போக்குவரத்திற்காக, புக்கிட்திங்கி நகரத்திற்குள் உள்ள இடங்களை இணைக்கும் "மெர்சி" (மெராபி சிங்கலாங்) மற்றும் "ஐகாபே" என அழைக்கப்படும் பொது போக்குவரத்து முறையைப் பயன்படுத்துகின்றனர்.
பெண்டி என பரவலாக அறியப்பட்ட பாரம்பரிய குதிரை வண்டியை இந்த நகரம் பாதுகாக்கிறது, இருப்பினும் இந்த பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாகவும் உள்ளது.
Remove ads
சுற்றுலா
இதன் காலநிலை மற்றும் மைய இருப்பிடம் காரணமாக சுற்றுலாப் பயணிகளால் பிரபலமான நகரமாக உள்ளது. இங்கு கிடைக்கும் மலிவான ஜவுளி மற்றும் நவீன ஆடை தயாரிப்புகள் காரணமாக புக்கிட்திங்கி ஒரு பிரபலமான கொள்முதல் இடமாக அறியப்படுகிறது.
குறிப்பாக மலேசியர்களுக்கு, புக்கிட்திங்கியைப் பார்க்க சிறந்த வழியாக மோட்டார் வாகனம், கார் அல்லது நடைப்பயணம் (மலையேற்றம்) உள்ளது. நகரத்திற்குள் உள்ள இடங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
- கரை சியானோக் (சியானோக் கனியன்)
- லுபாங் ஜெபாங் (ஜப்பானிய குகைகள்) — இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்களால் கட்டப்பட்ட நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களின் வலைப்பின்னல்
- ஜாம் கடாங் — 1926 இல் டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட ஒரு பெரிய கடிகார கோபுரம்.[4]
- பசார் அட்டாஸ் மற்றும் பசார் அவுர் குனிங் ஆகியவை பாரம்பரிய சந்தைகள் நடைபெறும் நகரமாகும்.
- அருங்காட்சியகம் ரூமா கெலாஹிரன் புங் ஹட்டா இந்தோனேசிய ஸ்தாபக தந்தை முகமது ஹட்டா பிறந்த வீடு, இப்போது ஒரு அருங்காட்சியகமாக உள்ளது.[5]
- ஜன்ஜாங் கோட்டோ கடாங் கோட்டோ கடாங்கின் பெரிய சுவர் என்றும் அழைக்கப்படுகிறது. இது சீன பெரிய சுவரின் மினியேச்சர் போன்றது. இதன் நூறு படிக்கட்டுகள் தமன் பனோரமா மற்றும் கோட்டோ கடாங் கிராமத்தை இணைக்கிறது.
குறிப்பிடத்தக்க அருகிலுள்ள இடங்களில், மனிஞா ஏரி , தருசன் ஏரி, கமங் குகை, மற்றும் தரங் குகை போன்றவை அடங்கும்.
Remove ads
சகோதரி நகரங்கள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads