புக்கிட் கியாரா

கோலாலம்பூர் மாநகராட்சி பகுதிக்குள் ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia

புக்கிட் கியாராmap
Remove ads

புக்கிட் கியாரா, (மலாய்; ஆங்கிலம்: Bukit Kiara; சீனம்: 武吉加拉); என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகராட்சி பகுதிக்குள் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி ஆகும் இந்தப் பகுதி டாமன்சாரா அயிட்ஸ், தாமான் துன் டாக்டர் இசுமாயில், மோன்ட் கியாரா, செரி அர்த்தாமாஸ் மற்றும் பங்சார் போன்ற புறநகர்ப் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ளது.[1]

விரைவான உண்மைகள் புக்கிட் கியாரா, நாடு ...

கோலாலம்பூரின் கடைசி மீதமுள்ள 'பசுமை நுரையீரல்'களில் ஒன்றாக புக்கிட் கியாரா கருதப்படுகிறது. இந்தப் பகுதி பல காட்டுப் பாதைகள், அழகிய ஆறுகள், நீரோடைகள் மற்றும் ஏராளமான பூர்வீக வனவிலங்குகளைக் கொண்ட காட்டுப் பகுதியாகவும் அறியப்படுகிறது.[2]

Remove ads

பொது

புக்கிட் கியாராவிற்கு அருகில் மோன்ட் கியாரா நகரம் உள்ளது. மோன்ட் கியாராவில் துரிதமான வீட்டுவசதிகள் மற்றும் வணிக வளர்ச்சிகள் உருவாகி உள்ளன. இருந்தபோதிலும், கோலாலம்பூரின் தாக்கத்தில் இருந்து விலகி ஓர் இயற்கை சோலையாகவே புக்கிட் கியாரா இன்றும் திகழ்கிறது.[3][4]

புக்கிட் கியாராவில் பல இடங்களில் நடைபெற்று வரும் மேம்பாடுகள் பல அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளன. புக்கிட் கியாராவை அரசிதழில் வெளியிட்டு பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

Remove ads

வரலாறு

1976-ஆம் ஆண்டில், 1,534 ஏக்கர் பரப்பளவிலான புக்கிட் கியாரா ரப்பர் தோட்டத்தை, நிங் சின் சியூ ரப்பர் நிறுவனத்திடம் இருந்தும் (Ng Chin Siu & Sons Rubber Estates Ltd) மற்றும் பிற சிறுபான்மை நில உரிமையாளர்களிடம் இருந்தும் RM 49.14 மில்லியனுக்கு அரசாங்கம் கையகப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, மலேசிய தேசிய பொது நிர்வாக நிறுவனம் (இந்தான்), மலேசிய தேசிய அறிவியல் மையம் மற்றும் மலேசிய பிணையங்கள் ஆணையம் ஆகியவற்றை அமைப்பதற்காக சுமார் 200 ஏக்கர் நிலம், பொது நிறுவன நிலமாக அறிவிக்கப்பட்டது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads