ஐ-சிட்டி

ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப வளாகம் From Wikipedia, the free encyclopedia

ஐ-சிட்டிmap
Remove ads

ஐ-சிட்டி அல்லது ஐ-சிட்டி சிலாங்கூர் (மலாய்; ஆங்கிலம்: i-City அல்லது i-City Selangor; சீனம்: 智慧城市); என்பது மலேசியா, சிலாங்கூர், சா ஆலாம், செக்சன் 7-இல்; முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அறிவார்ந்த தொழில்நுட்ப வளாகம் (Fully Integrated Intelligent City) ஆகும்.[3] இதன் பரப்பளவு ஒரு மில்லியன் சதுர அடி (93×103 மீ2)[4]

விரைவான உண்மைகள் ஐ-சிட்டி, நாடு ...

பெருநிறுவனங்கள், ஓய்வகங்கள் மற்றும் குடியிருப்புக் கூறுகளை (ICT-based Urban Development) உள்ளடக்கிய இந்த வளாகத்திற்குள் பிராந்திய அங்காடி மாளிகைகள், அலுவலக உயர்க் கோபுரங்கள், பல்லூடக அலுவலக அறைகள் (Cybercentre Office Suites), தங்கும் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தரவு மையங்கள் மற்றும் ஒரு புத்தாக்க மையம் (Innovation Center) போன்றவை உள்ளன.[5]

Remove ads

பொது

ஐ-சிட்டி என்பது மலேசிய பல்லூடகப் பெருவழியின் (Multimedia Super Corridor) ஓர் உயர் தொழில்நுட்ப வணிக மையமாகும். மலேசிய பல்லூடகப் பெருவழியின் தகுதி பெற்ற அறிவுசார் நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்ப வளாகத்தில் செயல்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்ப வணிக மையம், மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சினால் ஒரு சுற்றுலா தலமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் ஒரு பன்னாட்டுப் பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2002-ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் MYR-ஆக இருந்த ஐ-சிட்டி திட்டத்தின் மொத்த வளர்ச்சி மதிப்பு, தற்போது 10 பில்லியன் MYR-ஆக அதிகரித்துள்ளது.[6]

Remove ads

போக்குவரத்து

தொடருந்து

மலேசிய தொடருந்து சேவையின் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள  KD12  பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம் இந்த ஐ-சிட்டி வணிக மையத்திற்கு அருகில் உள்ளது.[7]

பேருந்து

இங்குள்ள சென்ட்ரல் ஐ-சிட்டி எனும் அங்காடி வளாகம், பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையத்துடன் அரை மணி நேர இடைவெளியில் இலவசப் பேருந்து சேவையை முன்பு வழங்கி வந்தது.[8] இருப்பினும், அந்தச் சேவை 2020-இல் நிறுத்தப்பட்டது.

இதனால் தற்போது, பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையத்திலிருந்து ஐ-சிட்டிக்கு ஒரே அணுகல் SA04  இஸ்மார்ட் சிலாங்கூர் இலவசப் பேருந்து சேவையாகும். பள்ளி நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமை சந்தை நாட்களிலும் ஏற்படும் நெரிசல்கள் காரணமாக SA04  பேருந்து பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையத்திற்குள் செல்வது இல்லை.

2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சா ஆலாம் வழித்தடம் முழுமையாகச் செயல்படத் தொடங்கிய பின்னர், SA15 பேருந்தின் மூலமாக ஐ-சிட்டி இணைக்கப்படுகிறது.[9]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads